வெற்றிமாறன் ஆசையில் மண் அள்ளிப்போட்ட தனுஷ் – பொல்லாதவன் படத்துல இப்படி ஒரு விஷயம் நடந்துருக்கா?

Published on: June 6, 2023
---Advertisement---

வெற்றிமாறன், தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த மிகச் சிறந்த இயக்குநர். தனுஷ் நடித்த பொல்லாதவன் தான் இவரது முதல் படம். அதற்கு பிறகு அசுரன், வடசென்னை, ஆடுகளம், விசாரணை உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கியவர்.

தனித்துவம் பெற்ற இயக்குநர்

தமிழ் சினிமாவில், இவரது படைப்புகள் தனித்துவம் பெற்றதாக கவனிக்கப்படுகின்றன. சமீபத்தில் சூரி விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விடுதலை படம், பரவலான பார்வையை பெற்றது. இந்த படத்தின், 2ம் பாகம் வெகு ஆவலாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ்
Vetri Maran

பொல்லாதவன் படம்

இந்நிலையில், தான் முதலில் இயக்கிய பொல்லாதவன் படம் குறித்த ஒரு முக்கிய தகவலை வெற்றிமாறன் கூறி இருக்கிறார். படித்த பட்டதாரி இளைஞரான தனுஷ், புதிய பைக் வாங்கிய நிலையில் அவரது காதல் கைகூடும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு கட்டத்தில், பைக் திருடு போய்விட பல துன்பங்களை தனுஷ் சந்திப்பது போன்ற கதைக்களம் இது. இதில், நடிகர் கிஷோர் நடிப்பும் அதிக கவனத்தை பெற்றது.
இந்த படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது,
என்னுடைய முதல் படம் பொல்லாதவன் இந்த படத்தின் டைட்டில் ஒரு விபத்தாக தான் அமைந்தது. இந்த படத்துக்கு நான் ஒரு நல்ல டைட்டிலை வைக்க நினைத்திருந்தேன்.

பாலகுமாரன் நாவல் இரும்புக்குதிரைகள்

பாலகுமாரன் எழுதிய ஒரு நாவல் இரும்புக்குதிரைகள். அதனால், இந்த படத்துக்கு இரும்புக்குதிரை என டைட்டில் வைக்கலாம் என இருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த டைட்டில் அது. ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் இந்த பெயர் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டனர். பிறகு அவர்களே தம்பிக்கு எந்த ஊரு என பெயர் வைக்கலாம் என்றனர். அதற்கு நான் கோபத்தில், அதற்கு பொல்லாதவன் என்று பெயர் வையுங்கள் என கோபமாக கூறினேன்

தனுஷ்
Dhanush

கோபத்தில் சொன்ன டைட்டில்

உடனே அவர்களும் சூப்பர், பொல்லாதவன் என்றே வைத்துவிடலாம் என்று கூறிவிட்டனர். இல்லை இல்லை, நான் படத்தின் ஹீரோ தனுஷிடம் பேசாமல் முடிவு பண்ண முடியாது. அவரிடம் பேசுகிறேன் என்றேன், தனுஷூக்கு போன் செய்து, நடந்த விவரங்களை கூறினால், அவர் கண்டிப்பாக மறுத்து விடுவார் என்ற ஆசையில், நடந்த விஷயங்களை சொன்னேன்.
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

கடைசியில் என்ன தனுஷ், பொல்லாதவன் என பெயர் வைக்கலாம் என்று கூறுகின்றனர் என்றேன். உடனே தனுஷ், அப்படியா சார், அந்த பேர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அதையே வெச்சுடலாம் சார், என்று கூறி விட்டார். என சிரித்தபடி கூறி இருக்கிறார் வெற்றிமாறன்.
தம்பிக்கு எந்த ஊரு, பொல்லாதவன் இரண்டுமே, தனுஷின் மாமனார் ரஜினிகாந்த் நடித்த பழைய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

elango

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.