
Cinema News
இந்தியன் 2 படப்பிடிப்பில் சித்தார்த்திற்கு கமல் கொடுத்த இன்ப அதிர்ச்சி… என்ன தெரியுமா?..
Published on
By
தனது முதல் படமான களத்தூர் கண்ணம்மாவில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் நடிகர் கமல்ஹாசன்.
கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவே நடித்து வருகிறார் கமல்ஹாசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு இவரது நடிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து அதில் நடிக்க தொடங்கினார் கமல்ஹாசன்.
அப்படி அவர் நடித்த ஆளவந்தான், ஹே ராம், விருமாண்டி போன்ற திரைப்படங்கள் இப்போதும் கூட மக்கள் மத்தியில் பேசப்படும் திரைப்படங்களாக உள்ளன.இதனால் மற்ற நடிகர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக கமல்ஹாசன் இருக்கிறார். நடிகர் சித்தார்த் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகர் ஆவார் தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே கமல்ஹாசனிடம் ஒரு நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது.
சித்தார்த் வைத்த கோரிக்கை:
இந்த நிலையில் சித்தார்த் தற்சமயம் சித்தா என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சித்தப்பா உறவுமுறை குறித்து பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை முடித்த பிறகு இது ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும் என சித்தார்த் நினைத்தார். எனவே அவர் கமல்ஹாசனை அழைத்து எனக்காக இந்த படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் சார் என கேட்டுள்ளார்.
ஆனால் அந்த சமயத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்தார். எனவே கேமராமேனை அழைத்து சித்தார்த்திற்காக ஒரு வீடியோவை தயார் செய்து அதை சித்தார்த்துக்கு அனுப்பி வைத்தார் கமல். அதில் சித்தார்த்தை பாராட்டி பேசி இருந்தார் கமல்ஹாசன், உலகிலேயே அதுதான் எனக்கு பெரும் மகிழ்ச்சி தினமும் அந்த வீடியோவை ஒரு முறையாவது பார்த்து விடுவேன் என்று பேட்டியில் கூறியுள்ளார் சித்தார்த்.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...