Connect with us
Ajith Kumar

Cinema News

காதல் மன்னன் படத்தில் இருந்து திடீரென வெளியேறிய அஜித்… எஸ்.ஜே.சூர்யாதான் காரணமா?

அஜித்தின் கெரியரில் மிக முக்கியமான வெற்றித் திரைப்படமாக அமைந்தது “காதல் மன்னன்” திரைப்படம். 1998 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை சரண் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இயக்குனர் சரணின் முதல் திரைப்படமாகும்.

“காதல் மன்னன்” திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மானு என்பவர் நடித்திருந்தார். இவர் இத்திரைப்படத்தில் ஏற்று நடித்த திலோத்தமா கதாப்பாத்திரம் இப்போதும் பேசப்பட்டு வரும் கதாப்பாத்திரமாக இருக்கிறது.

Kaadhal Mannan

Kaadhal Mannan

அஜித்துக்கு ஏற்பட்ட நிர்பந்தம்

“காதல் மன்னன்” திரைப்படம் உருவான சமயத்தில் அதற்கு முன்பு அஜித் நடித்து வெளியான பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியிருந்ததாம். ஆதலால் நிச்சயம் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் அஜித் இருந்தாராம்.

“காதல் மன்னன்” படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே அஜித் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருந்தாராம் அதில் “வாலி” திரைப்படமும் ஒன்று. “காதல் மன்னன்” படப்பிடிப்பு தளத்திற்கு எஸ்.ஜே.சூர்யா “வாலி” படத்தின் கதை சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு அடிக்கடி அஜித்தை பார்க்க வருவாராம். எனினும் “வாலி” திரைப்படம் சில காரணங்களுக்காக நிறுத்தப்பட்டிருந்ததாம்.

Vaalee

Vaalee

பாதியிலேயே வெளியேறிய அஜித்

“காதல் மன்னன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு படக்குழுவினர் முதன்முதலாக முழு திரைப்படத்தையும்  திரையிட்டுப் பார்த்தார்களாம். அப்போது அத்திரைப்படத்தின் இடைவேளை காட்சி முடிந்தவுடன் அஜித் திரையரங்கை விட்டு வெளியே சென்றுவிட்டாராம்.

வெளியே சென்றவர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தொடர்புகொண்டு “நிச்சயம் வாலி திரைப்படத்தை ஆரம்பிக்கிறோம்” என கூறினாராம். அதாவது “காதல் மன்னன்” திரைப்படம் நிச்சயமாக வெற்றியடையும் என்று அஜித்திற்கு தோன்றியதாம். அந்த தைரியத்தில்தான் அவர் எஸ்.ஜே.சூர்யாவிடம் மிக நம்பிக்கையோடு “வாலி” படத்தை தொடங்கலாம் என கூறினாராம்.

அவரின் நம்பிக்கையின்படியே “காதல் மன்னன்” திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதே போல் “வாலி” திரைப்படமும் மாஸ் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான் இப்போ மோசமான நிலைமைல இருக்கேன்! விரட்டுராங்க! கதறி அழுத சதா

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top