
Cinema News
100 கோடி சம்பாதிக்கிறீல.. எங்களுக்கு கொஞ்சம் குடு!.. பெரிய ஹீரோக்களால் ஆவேசமான டிஸ்கோ சாந்தி…
Published on
By
தமிழ் சினிமாவில் ஹேம மாலினி, சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு ஒரு கவர்ச்சி நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. அப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி பாடல்களுக்கு என்று தனியாக நடிககைகள் இருந்தார்கள்.
இப்போது வரை பாலிவுட்டில் இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது ஆனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் இப்படியான நடிகைகளும் இல்லாமல் போய் விட்டனர். மேலும் படத்தில் கவர்ச்சி நடனம் வந்தாலும் அதை கதாநாயகிகளே ஆடி கொள்கின்றனர்.
ஆனால் 80களில் சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி போன்ற நடிகைகள் மிகவும் பிரபலமாக இருந்தனர். 1983 ஆம் ஆண்டு வெளிவந்த வசந்தமே வாழ்க திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் டிஸ்கோ சாந்தி.
ஆவேசமான டிஸ்கோ சாந்தி:
சினிமாவில் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் அளவிலான மதிப்பையே டிஸ்கோ சாந்தி பெற்று வந்தார். இதனால் பல கஷ்டங்களை தமிழ் சினிமாவில் அனுபவித்துள்ளார். ஒரு பேட்டியில் இதை பற்றி அவர் பகிர்ந்துள்ளார்.
இதைப் பற்றி அவர் கூறும்பொழுது ஜூனியர் ஆர்டிஸ்டிகளுக்கு மரியாதை கொடுக்க மாட்டார்கள் போ.. வா என்றுதான் அழைப்பார்கள். அமர்வதற்கு ஒரு நாற்காலி கூட கொடுக்க மாட்டார்கள். உணவுகள் கூட சரியாக வழங்கப்படாது. சம்பளம் வரை எங்களுக்கு எதுவுமே சரியாக கிடைப்பதில்லை.
ஆனால் பெரும் பெரும் நடிகர்கள் இப்போதெல்லாம் பார்த்தால் 100 கோடி 150 கோடி என சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் இப்பொழுதும் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் மிகக் குறைந்த அளவிலான சம்பளமே பெற்று வருகின்றனர். இந்த கதாநாயகர்கள் நினைத்தால் அவர்களது சம்பளத்தில் இருந்து ஒரு தொகையை இந்த ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு கொடுக்கலாம். ஆனால் அவர்கள் கொடுப்பதில்லை என ஆவேசமாக பேசியிருந்தார் டிஸ்கோ சாந்தி.
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...