Connect with us
latha

Cinema News

நடிக்க தயக்கம் காட்டிய லதா; எம்.ஜி.ஆர் சொன்ன ஒரு வார்த்தை: அப்புறம் நடந்ததுதான் மேஜிக்!..

பொதுவாக புதுமுக நடிகைகளுக்கு பெரிய நடிகர்களுடன் முதன் முதலாக நடிக்கும்போது ஒருவித பயமும், படபடப்பும் வரும். அதனால் ஏற்படும் பதட்டத்தில் சரியாக நடிக்க முடியாமல் போகும். இவருடன் நம்மால் சிறப்பாக நடிக்க முடியுமா? சரியாக நடிக்கவில்லை எனில் திட்டுவாரா?.. நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமா? என்கிற எல்லா உணர்வும் சேர்ந்து படபடப்பை ஏற்படுத்திவிடும். இது பல நடிகைகளுக்கும் நடந்துள்ளது.

Ulagam sutrum Valiban

எம்.ஜி.ஆர் அதிக பொருட்செலவில் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தில்தான் லதாவை எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்தார். அவர் இல்லாமல் மஞ்சுளா, சந்திரகலா போன்ற நடிகைகளும் நடித்திருந்தனர். 1973ம் வருடம் வெளிவந்த இந்த திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது.

Ulagam Sutrum Valiban

Ulagam Sutrum Valiban

சரி விஷயத்திற்கு வருவோம். இந்த படத்தில் லதா அறிமுகமாகி முதல்நாள் எம்.ஜி.ஆருடன் படப்பிடிப்பு நடந்தது. ஆனால், அவரால் சரியாக நடிக்க முடியவில்லை. என்ன காரணம் என எம்.ஜி.ஆர் அவரிடம் கேட்க ‘சார் உங்களுடன் நடிக்க தயக்கமாக இருக்கிறது’ என கூறியுள்ளார். இவ்வளவு ஏற்பாடுகள் செய்த பின் நடிக்க தயக்கமாக இருக்கிறது என சொன்னால் யாருக்கும் கோபம் வரும். எம்.ஜி.ஆருக்கும் கோபம் வந்தது. ஆனால், அதை காட்டிக்கொள்ளவில்லை.

லதாவின் அருகில் சென்று ‘சரி. ஹீரோவை மாற்றிவிடலாமா?’ என கேட்டுள்ளார். அவ்வளவுதான் லதா விழுந்து விழுந்து சிரித்தாராம். அதன்பின் இயல்பாகி நன்றாக நடித்தாராம். இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Continue Reading

More in Cinema News

To Top