எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்? வெயிட்ட குறைச்சு படாத பாடு பட்ட பிரபலங்கள்

Published on: June 10, 2023
actors
---Advertisement---

நடிகர்களின் லைப் ஸ்டைல் பொதுவாக சற்று வித்தியாசமானது. சாதாரண மக்களின் லைப் ஸ்டைலை விட நடிகர்களின் லைப் ஸ்டைல் முற்றிலும் வேறுபட்டதாகவே அமையும். ஏனெனில் சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பது சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது என இந்த இரண்டு முக்கிய காரணங்களினால் அவர்களின் உடலில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும் .அந்த வகையில் சில நடிகர்கள் திடீரென வெயிட் ஏறிப் போய் இருப்பார்கள். அப்படி வெயிட் அதிகமாகி பட வாய்ப்புகள் குறைந்து அதன் பிறகு வெயிட்டை குறைத்து படாதபாடுபட்ட சில பிரபலங்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.

keerthy
keerthy

கீர்த்தி சுரேஷ்: அம்மணி முதலில் ஒரு தென்னிந்திய பெண்ணிற்கே உரித்தான தோற்றத்தில் தான் சினிமாவிற்குள் வந்தார். அடடா யார் இந்த பெண்?நமக்கு பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்காளே !என்று அனைவரும் மெய்சிலிர்க்க வைக்கிற அழகில் இருந்தார் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அழகை பார்த்து தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த நேரத்தில் பெரிய அளவில் கல்லா கட்டிய நடிகையாக திகழ்ந்தார் கீர்த்தி சுரேஷ். திடீரென அவருடைய உடல் எடை அதிகமாகி பலரின் கிண்டலுக்கும் ஆளானார்.

அதனால் வெயிட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக முழுவதுமாக மாமிச உணவுகளை தவிர்த்தார் கீர்த்தி சுரேஷ். ஒரு கட்டத்தில் பாலிவுட் நடிகைகளை தோற்கும் அளவிற்கு வந்து நின்றார். நீண்ட களுத்துடன் ஒல்லியான தோற்றத்தில் இருந்த கீர்த்தி சுரேஷை பார்த்து அனைவரும் வியந்தனர். முதலில் இருப்பதை விட இப்போது படுமோசமாக இருந்தார் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு சமீபத்தில் தான் கொஞ்சம் கொஞ்சமாக வெயிட்டை ஏற்றுவதற்காக சில முயற்சிகளை எடுத்து வருகிறார்.

hanshika
hanshika

ஹன்சிகா மோத்வானி: நடிப்பு கொஞ்சம் சுமார்தான் என்றாலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த நடிகை ஹன்சிகா மோத்வானி. நல்ல கொழு கொழுனு இருந்த ஹன்சிகாவை அனைவரும் ரசித்தார்கள். ஆனால் இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதற்கு உதாரணமாக இருந்தார் ஹன்சிகா .நெட்டிசன்கள் இவரை ட்ரோல் செய்து விமர்சித்தார்கள். அதன் பிறகு ஜிம் ,உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என தனது வெயிட்டை குறைக்க ஆரம்பித்தார். ஆனால் அதன் பிறகும் பட வாய்ப்புகள் வந்ததா என்று கேட்டால் அதுதான் இல்லை. அம்மணி இன்னும் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

vikram
vikram

விக்ரம்: கெட்டப் பைத்தியம் என்றே இவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஒரு படத்தில் கதை நன்றாக இருக்கிறதா என கேட்காமல் எத்தனை கெட்டப் என்று கேட்டு நடிக்க கூடியவராக விக்ரம் இப்போது ரசிகர்களிடம் தன்னை காட்டி வருகிறார். அந்த வகையில் ஐ படத்திற்காக நான்கு கெட்டப்களில் தனது உடல் எடையை மாற்றிக் கொண்டவர் விக்ரம். ஒரு கெட்டப்பில் 100 கிலோ அடுத்த கெட்டப்பில் 80 கிலோ அடுத்த கெட்டப்பில் 50 கிலோ என ஒரே படத்திற்காக தனது வெயிட்டை மாறி மாறி ஏற்றுவதும் இறக்குவதும் என இருந்த விக்ரமின் உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது.

அவருடைய முகமே சுருங்கி காணப்பட்டது பொது விழாக்களில் கலந்து கொண்ட விக்ரமை பார்த்து ரசிகர்கள் என்னடா இப்படி மாறிட்டாரே என்ற சொல்லும் அளவிற்கு அவருடைய தோற்றம் மோசமாக இருந்தது. அதை எப்படியோ சரி செய்து பொன்னியின் செல்வன் படத்தில் ஒருவித தோற்றத்தில் வந்து நின்றார். ஆனாலும் இப்படியே போனால் உடல்நிலை மோசமாகிவிடும் என ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

nayan
nayan

நயன்தாரா: தமிழ் சினிமாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நயன்தாரா .ஆரம்பத்தில் நம் பக்கத்து வீட்டு பெண் போன்று நடிக்க வந்த நயன்தாரா போகப் போக ஒரு ஹாட் பிக் நடிகையாகவே மாறினார். யாரடி நீ மோகினி என்ற படம் வரை அவருடைய அழகு அனைவராலும் ரசிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு மூக்கை சரி செய்து கொள்கிறேன் என ஏதோ ஒரு சர்ஜரி செய்து அவருடைய முகத்தோற்றமே சற்று மாறுபட்டு இருந்தது.

அதுவும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தாவா நயன்தாரா என்று கேட்டால் அனைவருடைய செலக்சன் சமந்தாவாகத்தான் இருந்தது. அந்தப் படத்தில் அவருடைய முகமே சற்று வித்தியாசமாக இருந்தது. எப்படியோ விக்னேஷ் சிவனை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

santhanam
santhanam

சந்தானம்: இவருடைய ரூட் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அது என்ன எல்லாரும் ஹீரோவா நடிக்கிறாங்க நாம நடிக்க கூடாதா என்ற ஒரு ஆசையில் தன் வாழ்க்கையில் தானே மண்ணை அள்ளி போட்டவர் சந்தானம். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என முரண்டு பிடித்துக் கொண்டு இன்றுவரை எந்த ஒரு படமும் ஓடாமல் பல்பு வாங்கிக் கொண்டிருக்கிறார் சந்தானம். இவரும் இடையில் தன் உடம்பு வெயிட்டை குறைத்து கண்ணம் எல்லாம் ஒட்டிப் போய் படுமோசமாக இருந்தார். ஆனாலும் அவருடைய விடாமுயற்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.