சிவாஜியே பார்த்து பயந்த இரண்டு நடிகர்கள்!.. இது தெரியாம போச்சே!..

தமிழ் திரை உலகில் ஒரு முழு ஆளுமையாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பிற்கு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் வரவேற்பை பெற்றவர். அவருடைய புகழ் தமிழ் சினிமா இருக்கும் வரை இருந்து கொண்டே இருக்கும் .அந்த அளவுக்கு சினிமாவிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர்.

sivaji1
sivaji1

பிரமிக்க வைத்த சிவாஜி

எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து அந்த திரைப்படங்களின் மூலம் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே தான் இருக்கின்றார் சிவாஜி கணேசன். வரலாற்றுக் கதைகள், புராணங்கள், இலக்கியங்கள் போன்ற கதைகளை அடிப்படையாகக் கொண்ட படங்களில் நடித்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

இன்றைய தலைமுறையினர் வரலாற்று கதைகளில் வரும் கதாபாத்திரங்களை நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதை சிவாஜியின் மூலமாக தன் கண்முன்னே நிறுத்தி கற்பனையாகவே பார்க்க கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார் சிவாஜி. கப்பலோட்டிய தமிழனாக, கர்ணனாக, வீர சிவாஜியாக என பல கதாபாத்திரங்களை தத்துரூபமாக காட்டியவர் சிவாஜி.

sivaji2
sivaji2

அந்த இரு நடிகர்கள்

பெரும்பாலும் குடும்ப இதயங்களை கவர்ந்தவர். ஏனெனில் குடும்ப பாங்கான கதைகளை தேர்ந்தெடுத்து சென்டிமெண்டாக எல்லாரையும் ஈர்த்தவர். இந்த நிலையில் சிவாஜியை பற்றி ஒரு நிகழ்வை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியின் மூலம் கூறினார்.

அதாவது சிவாஜி உடன் நடிக்க பல பேர் தயங்குவார்கள். அவருக்கு கீழ் எப்படி நாம் நடிக்கப் போகிறோம் என பல நடிகர்கள் தயங்கி அதை பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் சிவாஜி கணேசனே பார்த்து பிரமித்த நடிகர்கள் இருவர் இருக்கிறார்களாம்.

sivaji3
sivaji3

அதில் ஒருவர் எம்.ஆர்.ராதா மற்றொருவர் இவர்கள் இருவரும் சிவாஜியின் படத்தில் நடிக்கிறார்கள் என்றால் சிவாஜி கொஞ்சம் தயங்க தான் செய்வாராம். இந்த ஒரு செய்தியை தான் சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க :காசு தரணுமா?.. எனக்காடா வக்கிறீங்க செக்கு!. கச்சிதமா காய் நகர்த்திய சிவகார்த்திகேயன்