Cinema History
நல்ல விஷயம்தான!.. நான் ஹெல்ப் பண்றேன்.. அர்ஜுன் படத்தில் ரஜினி செய்த ப்ரோமோஷன்…
மற்ற துறைகளை விட சினிமாதான் மக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என ஒருமுறை விஜய் சேதுபதி அவரது பேட்டியில் கூறியிருந்தார். ஏனெனில் சினிமாவில்தான் படம் துவங்கும் முன்னே புகைப்பிடிப்பது மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என அறிவிப்பு போட்டுவிட்டு பிறகு படத்தை போடுகின்றனர்.
சினிமா வந்த காலம் முதலே விழிப்புணர்வு விஷயங்களை பரப்புவதற்கான ஒரு கருவியாக சினிமா இருந்துள்ளது. ஏனெனில் எந்த ஒரு விஷயத்தையும் சினிமா மூலமாக எளிமையாக மக்களிடம் கொண்டு செல்ல முடிந்தது. இந்த நிலையில்தான் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுகள் 1980 களில் அதிகமாக பரப்பப்பட்டு வந்தன.
இதற்காக அரசு திரைப்பட சங்ககளிடம் பேசியது. அப்போது ஏ.வி.எம் நிறுவனத்திடமும் கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டது. அப்போதுதான் ஏ.வி.எம் நிறுவனம் தாய் மேல் ஆணை என்கிற திரைப்படத்தை தயாரித்து வந்தது.
ரஜினிகாந்த் செய்த ப்ரோமோஷன்:
இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் கதாநாயகனாக நடித்தார். இயக்குனர் எல்.ராஜா இந்த படத்தை இயக்கினார். படம் துவங்கும்போது கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி படத்தை துவங்க திட்டமிட்டது. அப்போது யாருக்கும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என பார்க்கும்போது ரஜினிதான் அப்போது பெரும் நடிகராக இருந்தார்.
எனவே இதுக்குறித்து ரஜினியிடம் பேசப்பட்டது. ரஜினியும் இதற்காக கண் தானம் குறித்து விழிப்புணர்வு வீடியோ பேசி கொடுத்தார். தாய் மேல் ஆணை திரைப்படத்தில் இப்போதும் துவங்கும்போது ரஜினியின் விழிப்புணர்வு வீடியோ வந்தப்பிறகே படம் துவங்குவதை பார்க்க முடியும்.
இதையும் படிங்க: சர்ச்சைக்குரிய அந்த இரண்டு திரைப்படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?… கொந்தளிக்கும் ரசிகர்கள்…