Connect with us

Cinema News

ஹேர் ஸ்டைலை வைத்து ட்ரிக் செய்த ஜெய்சங்கர்!.. இப்படியெல்லாம் நடந்துச்சா?

எப்போதுமே சினிமா என்பது பொது மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் பாட்ஷா திரைப்படத்தில் நடித்த பொழுது அந்த பாட்ஷா படத்தில் அவர் போட்டிருக்கும் கோர்ட் மாடல் விற்பனைக்கு வந்தபோது பலரால் அதிகமாக அது வாங்கப்பட்டது. இப்படி சினிமாவில் கதாநாயகர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் மக்கள் மத்தியில் பெரும் பிரதிபலிப்பை ஏற்படுத்தி வந்தது.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இப்படி பல விஷயங்கள் பொது மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தின. அதில் நடிகர்களின் ஹேர் ஸ்டைலும் முக்கியமான ஒரு விஷயமாக இருந்தது. சினிமாவில் ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு வகையான சிகை அலங்காரத்தை கொண்டிருந்தனர். எம்ஜிஆர் ஆரம்ப காலகட்டங்களில் ஒரு வகையான முடி அலங்காரத்தையும் பிறகு இறுதி காலகட்டங்களில் சுருட்டை முடியுடன் கூடிய ஹேர் ஸ்டைலையும் கொண்டிருந்தார்.

ஜெய்சங்கரின் சிகை அலங்காரம்:

அதேபோல சிவாஜியும் கிட்டத்தட்ட ஒரே ஹேர் ஸ்டைல் அலங்காரத்திலே நடித்திருந்தார். எனவே தொடர்ந்து கதாநாயகர்கள் கொண்டிருந்த இந்த சிகை அலங்காரங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இதனை தொடர்ந்து இளைஞர்களும் அதே மாதிரியான ஹேர் ஸ்டைலை வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

இந்த நிலையில் சினிமாவிற்கு புதிதாக வந்த ஜெய்சங்கர் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் பொதுவாக கல்லூரி மாணவர்கள் எப்படியான ஹேர் ஸ்டைலில் இருப்பார்களோ, அப்படியான ஒரு ஹேர் ஸ்டைலை கொண்டு சினிமாவிற்கு ஆறுமுகமானார்.

இது குறித்து பிரமுகர் காந்தராஜ் கூறும்பொழுது அப்போது கல்லூரிகளில் நாங்கள் என்ன வகையான ஹேர் ஸ்டைலில் சுற்றி கொண்டிருந்தோமோ அதே மாதிரியே ஜெய்சங்கரும் சினிமாவிற்கு வந்தார். அதுவே இளைஞர்களை ஜெய்சங்கர் மத்தியில் இடம் பிடிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது எனக் கூறியுள்ளார்.

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top