Connect with us

Cinema News

வடிவேலுவிற்கு தமிழ் சினிமாவில் இனிமேல் வாய்ப்பில்ல ராஜாதான்!.. இதுதான் காரணமாம்…

தமிழ் சினிமாவில் பெரும் சிகரத்தைத் தொட்ட நடிகர்களின் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் இதுவரை இருந்த மற்ற நகைச்சுவை நடிகர்களை விடவும் அதிகமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் வடிவேல்.

தற்சமயம் சமூக வலைத்தளங்கள் முழுவதும் வடிவேலுவின் முகமே மீம்ஸ் ஆகவும் வீடியோக்களாகவும் நிரம்பி வழிவதை பார்க்க முடியும். அப்படியான புகழ் பெற்ற வடிவேலு அரசியலுக்கு சென்ற பிறகு திரையில் வாய்ப்புகளை இழந்தார்.

அதன் பிறகு திரைக்கு வந்த வடிவேலுவிற்கு திரும்பவும் சினிமாவில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவே இல்லை. இது குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் கூறும் பொழுது வடிவேலு மீண்டும் திரைக்கு வந்தபோது அவருக்கு படம் கொடுப்பதற்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பெரிதாக தயாராக இல்லை. இருந்தாலும் கத்தி சண்டை திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த படத்தின் காமெடிகளும் கூட பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து தற்சமயம் அவர் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படமும் பெரிதாக வெற்றி அடையவில்லை. ஏனெனில் வடிவேலு  அவருடன் எப்போதும் கூட நடிக்கும் மற்ற நகைச்சுவை நடிகர்களை நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடிக்க வைக்கவில்லை.

மேலும் வடிவேலு அனைவரிடமும் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார் சந்திரமுகி 2 படப்பில் கூட இயக்குனர் வாசுவை அழ வைத்துவிட்டார் வடிவேலு. எனவே தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வடிவேலுவை வைத்து படம் எடுப்பதற்கு யோசிக்கின்றனர்.எனவே மாமன்னன்தான் வடிவேலுவிற்கு இறுதி படமாக இருக்கும் இனிமேல் வாய்ப்பு கிடைப்பது கடினமே என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Continue Reading

More in Cinema News

To Top