நயன்தாராவுக்கு இது கூட தெரியாதா? பாவம் புருஷன் – மூடி வச்ச ரகசியத்தை உடைத்த ஆர்யா!

Published on: June 13, 2023
nayanthara dp
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா கேரளாவை பூர்விகமாக கொண்டு சென்னையில் நடிகையாக வளர்ந்து பிரபலமாகியுள்ளார். ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆன இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்று நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பெற்றார்.

nayanthara 1

மிகவும் துணிச்சலான ஸ்டார் ஹீரோக்களுக்கு நிகராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி நடிக்கும் நயன்தாரா தனக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டு நடிப்பில் முத்திரை பதித்தார்.

சினிமா பின்னணி இல்லாத சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்து பல்வேறு சர்ச்சைகள், எதிர்ப்புகளை தாண்டி சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வந்தார். இவர் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை சுமார் 8 ஆண்டுகள் காதலித்து பின்னர் பிரமாண்டமாக திருமணம் செய்துக்கொண்டார்.

nayanthara

இவர்கள் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர். தொடர்ந்து இருவரும் தங்களது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ஆர்யா காதர் பாட்சா முத்துராமலிங்கம்படத்தின் விழாவில் நயன்தாரா குறித்து பேசியபோது. நயன்தாரா மிகச்சிறந்த நடிகை. அவருடன் லாங் ட்ரைவ் போகவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால், அவருடன் போனால் கார் நான் தான் ஓட்டவேண்டியிருக்கும். ஆம், நயன்தாராவுக்கு கார் ஒட்டவே தெரியாது என கூறி சிரித்தார். இதை கேட்ட நயன் ரசிகர்கள், என்னது நயன்தாராவுக்கு கார் கூட ஓட்ட தெரியாதா? என செம ஷாக்கிவிட்டனர்

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.