விஜய்யை நான் இப்படிதான் கூப்பிடுவேன்… ஆனால், எல்லாரும் என்னை திட்டுறாங்க – சித்தார்த் வருத்தம்!

Published on: June 13, 2023
vijay siddharth
---Advertisement---

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவோடு மணி ரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்து வந்த சித்தார்த்துக்கு பாய்ஸ் படம் மூலம் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு விருப்பமே இல்லாமல் நடித்த அந்த படம் மாபெரும் ஹிட் அடித்து நல்ல அடித்தளமாக அமைந்தது.

siddharth

அதன் பின்னர் நடிகர், பாடகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஆய்த எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என்.எச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், அவள் கடைசியாக டக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

vijay 1

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் விஜய்யை பெயர் விட்டு தான் கூப்பிடுவேன். ஆனால் உலகம் மாறிடுச்சு…. அவர் இப்போ பெரிய ஹீரோ ஆகிவிட்டதால் நான் அப்படி கூப்பிடுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அவர் மிகவும் நல்ல மனிதர், எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு உள்ளது. நான் அவரை எப்போ பார்த்தாலும் ரொம்ப நேரம் கட்டிப்பிடித்துக்கொண்டு விடவே மாட்டேன் அவ்வளவு பிடிக்கும் என கூறியுள்ளார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.