தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அடுத்தடுத்து பல்வேறு காமெடிய நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட அவர் மிக குறுகிய காலத்திலேயே பிரபலமானவராக புகழ் பெற்றார்.

அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், மாரி , புலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் மெலிந்து, கன்னங்கள் ஒட்டிப்போய் சுத்தமாக ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு என்ன காரணம் என அவர் வெளிப்படையாக கூறவேயில்லை.

இந்நிலையில் முதன் முறையாக சமீபத்திய பேட்டி ஒன்றில், எனது இந்த நிலைமைக்கு காரணம் கெட்ட பழக்கம் தான். யார் சொல்லியும் கேட்டாக்காமல் எல்லோரும் செய்யும் அந்த தப்பை நானும் செய்தேன். அதனால் எனக்கு மஞ்சள் காமாலை வந்துவிட்டது.
அதையடுத்து உடல் நிலை மிகவும் மோசமடைந்து கஷ்டப்பட்டேன். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி தேறி வந்துள்ளேன். எனவே நீங்களும் தவறான விஷயங்களில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளாமல் குடும்பம் , நண்பர்கள் , உடற்பயிற்சி , ஆராக்கியமான உணவுமுறை , அன்பை பரிமாறிதல் என மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறார்.





