
Cinema News
வடிவுக்கரசிக்கு கிடைச்ச மரியாதை கூட கவுண்டமணிக்கு கிடைக்கலையே… படத்தில் இருந்து தூக்கிய கமல்!..
Published on
By
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக கதாநாயகனாக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். தனது முதல் படமான களத்தூர் கண்ணம்மாவில் துவங்கி விக்ரம் திரைப்படம் வரை தொடர்ந்து ஹிட் படங்களாகவே கொடுத்து வருகிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசனை பொறுத்தவரை அவருக்கென்று ஒரு நடிகர் குழுவை வைத்துள்ளார். அவர்களை கமல்ஹாசனின் அதிக படங்களில் பார்க்க முடியும். உதாரணமாக நாசர், சந்தான பாரதி, நாகேஷ், டெல்லி கணேஷ் போன்ற நடிகர்களை அவரின் அதிக படங்களில் பார்க்க முடியும்.
ஏனெனில் அவர்களின் நடிப்பை கமல்ஹாசன் மிகவும் விரும்பினார். அவர்களுடன் நடிக்கும்போது இவரது நடிப்பும் தனித்துவமானதாக தெரியும் என நினைத்தார் என பேச்சுக்கள் உண்டு. அப்போதைய காலக்கட்டத்தில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவருக்குமே பிடித்த காமெடி நடிகரான ஜனகராஜை மிகவும் பிடித்திருந்தது.
கமல் எடுத்த நடவடிக்கை:
தொடர்ந்து அவர்களது திரைப்படங்களில் ஜனகராஜை நடிக்க வைத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நடித்து வந்தார் கமல்ஹாசன். அந்த படத்தில் காமெடி போலீஸ் கதாபாத்திரத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்க இருந்தனர். அதே போல கமலின் வளர்ப்பு தாயாக வடிவுக்கரசியை நடிக்க வைக்க இருந்தனர்.
ஆனால் கமல்ஹாசன் அதற்கு மாற்று யோசனையை வைத்திருந்தார். ஏற்கனவே அவருக்கு கவுண்டமணியுடன் பிரச்சனை இருந்தது. மேலும் அந்த போலீஸ் கதாபாத்திரத்தில் கவுண்டமணியை விட ஜனகராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். எனவே கவுண்டமணியை படத்தில் இருந்து நீக்க செய்தார் கமல்ஹாசன்.
அதே போல வடிவுக்கரசிக்கு பதிலாக மனோராமாவை அம்மா பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என நினைத்தார். ஆனால் வடிவுக்கரசி மனம் நோகும்படி எதுவும் செய்யக்கூடாது என நினைத்த கமல் படத்திற்கான மொத்த சம்பளத்தையும் வழங்கி நல்ல விதமாக எடுத்து கூறி அவரை அனுப்பியுள்ளார். இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ப்ளீஸ் எனக்காக இதை பண்ணுங்க!.. மக்களிடம் கோரிக்கை வைத்த எஸ்.ஜே சூர்யா..
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...
Karur: தற்போது தமிழ் நாட்டு அரசியல் களமே பரபரப்பாக இருக்கின்றது.ஒட்டுமொத்த ஆளுங்கட்சி அமைச்சர்களும் கரூரை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். நேற்று கரூரில் நடந்த...
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...