
Cinema News
கேவலம் பணத்துக்காக இதை செய்யணுமா?.. சிம்புவின் செயலால் கோபமான பத்திரிக்கையாளர்…
Published on
By
தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. சிறு பிள்ளையாக இருக்கும்போதே தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்கிற பட்ட பெயருடன் சினிமாவில் வலம் வந்தார் சிம்பு.
இளைஞனான பிறகு அவர் நடித்த குத்து,கோவில், தம் போன்ற திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. சிம்பு சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெறுவதற்கு அவரது தந்தை டி.ராஜேந்திரன் முக்கிய காரணமாக இருந்தார்.
ஆனால் வல்லவன் போன்ற திரைப்படங்கள் வெளிவந்த சமயங்களில் சிம்பு குறித்து அதிக விமர்சனங்கள் வந்தன. திரைப்படங்கள் எடுப்பதற்கு சிம்பு அவ்வளவாக ஒத்து போவதில்லை என்பது அவரது மேல் வைக்கப்படும் குற்றசாற்றாக இருந்தது. படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை, படப்பிடிப்பு நடக்கும்போது பாதியிலேயே சென்றுவிடுகிறார் என இயக்குனர்கள் அவர் மேல் கோபத்தில் இருந்தனர்.
சிம்பு செய்த பிரச்சனை:
சரவணா திரைப்படத்தை இயக்கும்போது கே.எஸ் ரவிக்குமாரும் இந்த பிரச்சனைகளை அனுபவித்தார். இந்த நிலையில் படிப்படியாக சிம்புவின் வாய்ப்புகள் குறைய துவங்கின. இந்த நிலையில் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு திருந்தி விட்டார். இப்போது ஒழுங்காக படம் நடித்து கொடுக்கிறார் என பேசப்பட்டது.
ஆனால் பத்திரிக்கையாளர் அந்தனன் கூறும்போது இன்னமும் சிம்பு திருந்தவில்லை. படங்களில் கமிட் ஆகும்போது அதிக சம்பளமுடன் படம் கிடைத்தால் கமிட் ஆன குறைவான சம்பளம் உள்ள படத்தை கேன்சல் செய்துவிடுகிறார். சிம்புவிற்கு என்ன பணத்துக்கா குறைச்சல். கேவலம் பணத்துக்காக இதை சிம்பு செய்யணுமா? என அவரை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அந்தனன்.
Bison: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வரப் போகும் திரைப்படம் பைசன். துருவ் விக்ரம் நடிப்பில் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன....
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...