பிரபல நடிகருக்கு சீட் தர மறுத்த கல்லூரி.. மாஸ் காட்டி உதயநிதி செய்த வேலை…

Published on: June 15, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் அரசியலிலும் முக்கியமான நபராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்த காரணத்தால் தமிழில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அப்போது இயக்குனர் ராஜேஷ் மிகவும் பிரபலமாக இருந்தார்.

அவரது திரைப்படங்கள் அனைத்தும் நகைச்சுவை திரைப்படங்களாகவே இருந்தன. எனவே ஒரு காமெடி கதாநாயகனாக அறிமுகமாகலாம் என முடிவெடுத்தார் உதயநிதி. இதனையடுத்து ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கதிர்வேலனின் காதல், நண்பேண்டா என வரிசையாக காமெடி படங்களாக நடித்தார் உதயநிதி.

udhayanithi
udhayanithi

அவருக்கு முதன் முதலாக ஆக்‌ஷன் திரைப்படமாக அமைந்த படம் கெத்து. அதனை தொடர்ந்து மனிதன், நிமிர் என கொஞ்சம் மாறுப்பட்ட கதைகளில் நடிக்க துவங்கினார் உதயநிதி. இறுதியாக அவர் நடித்த கலக தலைவன் நல்ல வரவேற்பை பெற்றது.

உதவி செய்த உதயநிதி:

தமிழ் நடிகர் கிருஷ்ணா ஒரு பேட்டியில் அவருக்கு உதயநிதி செய்த உதவிக்குறித்து ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். கிருஷ்ணா தமிழில் கழுகு, யாமிருக்க பயமேன் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். அவர் பள்ளி முடித்த பிறகு அடுத்து கல்லூரி சேர்வதாக இருந்தால் லயோலா கல்லூரியில்தான் சேர வேண்டும் என நினைத்தார்.

Kreshna
Kreshna

ஆனால் அவரது மதிப்பெண் குறைவாக இருந்ததால் அவருக்கு சீட் கொடுக்க லயோலா கல்லூரியில் மறுத்துவிட்டனர். எனவே தனது பெற்றோரை அழைத்துக்கொண்டு லயோலா கல்லூரிக்கு சென்றுள்ளார் கிருஷ்ணா. அந்த சமயம் பார்த்து அங்கு உதயநிதி வந்துள்ளார்.

அவர் விஷயத்தை கேள்விப்பட்டு வேகமாக சென்று அலுவலகத்தில் பேசி உடனே கிருஷ்ணாவிற்கு சீட் வாங்கி தந்துள்ளார். இதை தனது பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார் கிருஷ்ணா.

இதையும் படிங்க: அந்த படத்தை பார்த்துட்டு ரகுவரன் இப்படி சொல்லுவாருனு நினைக்கல! சுந்தர்.சி பகிர்ந்த ரகசியம்

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.