சிம்புவுக்கு துரோகம் செய்த நடிகைகள்… சாமியாரா போனவருக்கு சம்சார ஆசை – இப்போ இந்த நடிகை தான் எல்லாமே!

Published on: June 15, 2023
simbu dp
---Advertisement---

அப்பா டி. ராஜேந்தர் படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர் நடிகர் சிம்பு. பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து எல்லோரது மனதிலும் இடம் பிடித்த சிம்பு. உறவை காத்த கிளி என்ற படத்தில் குழந்தையாக நடித்தார். தொடர்ந்து மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், சாந்தி என்னது சாந்தி, பெற்றெடுத்த பிள்ளை, தாய் தங்கை பாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என குழந்தையிலே டைட்டில் பெற்றவர் சிம்பு தான்.

அதன் பிறகு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆனார். பின்னர் தொடர்ந்து அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, போடா போடி, வாலு, அச்சம் என்பது மடமையடா, செக்கச்சிவந்த வானம் என பல படங்களில் நடித்தார். simbu 2

Also Read

 

இதனிடையே சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.அதன் பின்னர் மீண்டும் மாநாடு திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து பத்து தல படத்தில் நடித்து மீண்டும் வெற்றி வாகை சூடினார். இந்நிலையில் சிம்பு சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்த வேகத்திலே சில பல சர்ச்சைகளும், காதல் தோல்விகளும், ஏமாற்றங்களும், கிசுகிசுக்களும் சந்தித்து விமர்சிக்கப்பட்டார்.

குறிப்பாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா காதலித்து ஏமாற்றி தனுஷுக்கு கழுத்தை நீட்டியதை சிம்புவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையாம். பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து நடிகை நயன்தாராவை காதலித்து அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் கூட லீக்காகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி அவரது பெயரை கெடுத்தது. அதன் பின்னர் நடிகை ஹன்சிகாவால் காதலித்து ஏமாற்றப்பட்டார். பின்னர் காதலும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். இனிமேல் கல்யாணமே பண்ணிக்கபோறதில்லை என சாமியாராக, காவி வேட்டி , கருப்பு வேட்டி என கட்டிக்கொண்டு சுற்றித்திரிந்து வந்தார்.

simbu 1

பின்னர் மீண்டும் ஆசைகள் துளிர்விட்டு எழ திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே மீண்டும் ஒரு இளம் நடிகை மீது காதலில் விழுந்துவிட்டாராம். ஆம் ஈஸ்வரன் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை நிதி அகர்வால் தானாம். சிம்பு கூடவே இருந்து அவருக்கு வேண்டியதெல்லாம் செய்து வருகிறாராம் நிதி அகர்வால். கிட்ட தட்ட சிம்புவின் மேனேஜர் போன்று இருந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் கும்பல் கூடி பேசி வருகிறது.