போய் பிச்சைக்காரங்களோட படுங்க!.. இயக்குனரால் அஞ்சலிக்கு வந்த சங்கடம்…

Published on: June 16, 2023
---Advertisement---

பொதுவாக வெள்ளை நிறம்தான் அழகு என்கிற மனப்போக்கு சமூகத்தில் பரவலாக நிலவி வருகிறது. இதனால் வெள்ளை நிறத்தில் இருப்பவர்களே சினிமாவில் கதாநாயகிகளாக இருந்து வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல காலங்களாக கருப்பு நிறமும் அழகுதான் என்ற நிரூபித்த கதாநாயகிகள் உண்டு.

அப்படி தமிழ் சினிமாவில் கருப்பு நிறத்திலேயே வந்து வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. தமிழில் முதன் முதலாக இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் அஞ்சலி. கற்றது தமிழ் திரைப்படத்தில் அஞ்சலியின் ஆனந்தி என்கிற கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது.

anjali
anjali

இதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கில் இரு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில்தான் இயக்குனர் வசந்தபாலன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் வாழ்க்கையை காட்டும் வகையில் ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தார். இந்த திரைப்படத்திற்கு அஞ்சலி சரியாக இருப்பார் என நினைத்தார் வசந்தபாலன்.

அஞ்சலிக்கு வந்த சங்கடம்:

எனவே அஞ்சலியிடம் படக்கதையை கூறினார். அதனை கேட்ட அஞ்சலி உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். பிறகு அவரை உண்மையான துணிக்கடைக்கு அழைத்து சென்று அங்கு வேலை எப்படி என்பதெல்லாம் சொல்லி கொடுத்த பிறகு அங்காடி தெரு திரைப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கியது.

ஆரம்பித்தப்போது படப்பிடிப்பு நன்றாக சென்றாலும் போக போக வசந்தபாலன் படப்பிடிப்பு அஞ்சலிக்கு பிடிக்காமல் போனது. ப்ளாட்பார்மில் படுத்திருப்பது போன்ற ஒரு காட்சிக்கு, உண்மையாகவே ப்ளாட்பார்மில் படுத்திருக்கும் பிச்சைக்காரர்கள், மற்றும் கூலி தொழிலாளி மக்களுடன் படுக்க வைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார் வசந்தபாலன். தேவையில்லாமல் இந்த படத்தில் கமிட் ஆகி விட்டோமே என நினைத்துள்ளார் அஞ்சலி.

ஆனால் படமாக வரும்போது அதன் அனைத்து காட்சிகளும் நன்றாக இருந்துள்ளன. முக்கியமான அஞ்சலிக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை கொடுத்த திரைப்படமாக இது இருந்தது.

இதையும் படிங்க: வெற்றிப்பட இயக்குனர்களை குறிவைத்து காலி பண்ணும் நடிகர்கள்.. விட்ருங்கப்பா பாவம்!..