2 நாளுக்குள்ள நாய்க்குட்டியோட டெல்லில இருக்கணும்!.. எஸ்.ஜே சூர்யாவுக்கு கொடுத்த டாஸ்க்…

Published on: June 16, 2023
---Advertisement---

தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. அஜித் நடித்த வாலி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் எஸ்.ஜே சூர்யா.

அதற்கு முன்பு இயக்குனர் வசந்திடம் இவர் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அப்போது வசந்த் ஆசை திரைப்படத்தை இயக்கி வந்தார். அஜித் நடிப்பில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்களில் ஆசை முக்கியமான திரைப்படமாகும்.

sj suryah
sj suryah

ஆசை படத்தில் நடிக்கும்போதுதான் அஜித்திற்கு எஸ்.ஜே சூர்யாவுடன் பழக்கம் உண்டானது. அந்த சமயத்தில் எஸ்.ஜே சூர்யா தான் ஒரு திரைப்படம் இயக்க போவதாக கூறி அதன் கதையை கூறியுள்ளார். அதனை கேட்ட அஜித் இந்த கதை நல்லா இருக்கு, இதுல நான் நடிக்கிறேன் என அப்போதே கூறியுள்ளார்.

எஸ்.ஜே சூர்யாவிற்கு கொடுத்த டாஸ்க்:

ஆசை படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அதில் அஜித் கதாநாயகிக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளிப்பது போன்ற காட்சி வரும். இதற்காக ஒரு தனிரக நாய்க்குட்டியை கொண்டு வந்தனர். ஆனால் அந்த நாய்க்குட்டியை அடுத்த 2 நாட்களில் டெல்லியில் ஒரு படப்பிடிப்பிற்கு கொண்டு செல்ல வேண்டி இருந்தது.

எனவே எஸ்.ஜே சூர்யாவை அழைத்த இயக்குனர் வசந்த் அவரிடம் நாய்க்குட்டியையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து 2 நாளில் இதை டெல்லியில் கொடுத்துவிடு என முகவரியை கொடுத்துள்ளார். எந்த எதிர்ப்பேச்சும் பேசாத எஸ்.ஜே சூர்யா நேராக எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் சென்று ஒரு வாலியும் பால் பாக்கெட்டும் வாங்கி கொண்டு ரயில் ஏறி உள்ளார்.

அடுத்த 2 நாளில் டெல்லிக்கு சென்று நாய்க்குட்டியை ஒப்படைத்துள்ளார். பிரபல நாடக நடிகர் மாரிமுத்து இந்த செய்தியை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கோபிநாயரை நம்பி மோசம் போனேன்!.. பணத்தை இழந்து கதறும் ஈழத்தமிழ் பெண்!. அட பாவமே!..

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.