படம் ரிலீஸ் ஆக உதவிய எம்.ஜி.ஆர்.. நன்றிக்கடனாக பாரதிராஜா செய்த நெகிழ்ச்சி சம்பவம்!..

Published on: June 16, 2023
bharathi
---Advertisement---

திரையுலகில் நடிகராக இருந்து முதல்வரக மாறியவர் எம்.ஜி.ஆர். அதனால், திரையுலகை சேர்ந்த பிரச்சனைகளுக்கும் அவர் பலமுறை உதவியுள்ளார். அவரிடம் கமல்ஹாசன், பாக்கியராஜ், பாரதிராஜா, சத்தியராஜ் போன்ற சிலர் நல்ல நெருக்கமும், அன்பும் கொண்டிருந்தனர். இவர்களுக்கு எப்போது என்ன பிரச்சனை என்றாலும் உடனே அவர்கள் செல்வது எம்.ஜி.ஆரிடம்தான்.

mgr

பாரதிராஜா இயக்கிய திரைப்படம் வேதம் புதிது. ராஜா, அமலா மற்றும் முக்கிய வேடத்தில் சத்தியராஜ் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாக கூடாது என திரையுலகினரை சேர்ந்த சிலரே வேலை செய்தனர். இந்த விஷயத்தை அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரிடம் கவனத்திற்கு பாரதிராஜா கொண்டுசென்றார். அவருக்கு ஒரு பிரத்யோக காட்சியையும் பாரதிராஜா ஏற்பாடு செய்தார்.

vedaham

பாரதிராஜாவை அருகில் வைத்துகொண்டு படம் பார்த்த எம்.ஜி.ஆர் பல காட்சிகளை பாராட்டினார். மேலும், அப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமனை தொடர்பு கொண்டு பேசி அப்படத்திற்கு தணிக்கை சான்றிதழையும் வாங்கி கொடுத்தார். எம்.ஜி.ஆர் உள்ளே வந்ததால் எதிர்ப்பாளர்கள் அமைதியாகி விட்டனர். எம்.ஜி.ஆர் பார்த்த கடைசி திரைப்படம் வேதம் புதிது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் படம் வெளியானபோது எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை. அவருக்கு நன்றி சொல்லும் விதமாக அவரின் இறுதி ஊர்வலத்தை படம்பிடித்து வேதம் புதிது படம் ஓடிய தியேட்டர்கள் ஒளிபரப்பினார் பாரதிராஜா.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.