
Cinema News
அந்த மாதிரி நான் நடிக்க மாட்டேன்!.. முரண்டு பிடித்த எம்.ஜி.ஆர்.. அட அந்த படத்துக்கா?!..
Published on
By
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து பெரிய நடிகராக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர். 37 வயதில் சினிமாவில் நடிக்க துவங்கி 30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் கோலோச்சியவர். நாடகங்களில் மட்டும் 30 வருடங்கள் நடித்தவர். ஆக்ஷன் கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக எம்.ஜி.ஆர் படங்களில் இடம்பெறும் வாள்வீச்சு சண்டை காட்சிகளுக்கு என தனி ரசிகர் கூட்டம் உண்டு.
mgr
அதேபோல், நடிப்பை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் சில கொள்கைகளை வைத்திருந்தார். புகை பிடிப்பது, மது அருந்துவது, பெண்களை கற்பழிப்பது, பெண்களை கேவலமாக பேசுவது போன்ற காட்சிகளில் நடிக்கவே மாட்டார். ஏனெனில், ‘ நான் அந்த காட்சிகளில் நடித்தால் எம்.ஜி.ஆரே அதை செய்யும் போது நாம் செய்தால் என்ன? என இளைஞர்கள் நினைப்பார்கள் அவர்களின் மனதில் தவறான எண்ணத்தை விதைக்கக் கூடாது’ என அடிக்கடி சொல்வார்.
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் கூண்டுக்கிளி. டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் 1954ம் வருடம் வெளியானது. இந்த படத்தில் புகை பிடிப்பது போல் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரை நடிக்க சொன்னார் இயக்குனர். ஆனால், எம்.ஜி.ஆர் ‘மன்னிக்கணும் சார் அது மாதிரி நான் நடிக்கமாட்டேன். நான் சிகரெட் பிடித்தல் படம் பார்த்துவிட்டு வெளியே சென்று ரசிகர்களும் சிகரெட் பிடிப்பார்கள். ஒருகட்டத்தில் அதுவே அவர்களுக்கு பழகி அதற்கு அடிமையாகி விடுவார்கள். அது அவர்களின் உடல்நலத்தை பாதிக்கும். எனவே, என்னை கட்டாய படுத்தாதீர்கள்’ என்றார்.
எம்.ஜி.ஆர் சொன்னதை இயக்குனர் ஏற்றுக்கொண்டாலும், கதைப்படி விரக்தியில், மன உளைச்சலில் அந்த கதாபாத்திரம் சிகரெட் பிடிப்பது போல் காட்சியை எடுக்கவுள்ளேன். இந்த காட்சியை எடுக்காமல் அடுத்த காட்சிக்கு செல்ல முடியாது என இயக்குனர் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆர் அப்போது பிரபலமாகவில்லை. ஆனால், ராமண்ணா பெரிய இயக்குனராக இருந்தார். படப்பிடிப்பு குழுவினரும் காத்திருந்தனர். எனவே, வேறுவழியில்லாமல் எம்.ஜி.ஆர் ஒப்புக்கொண்டார். ஆனால், சிகரெட்டை குடிக்காமல், கையில் புகையும் சிகரெட்டை வெறிக்க பார்த்துவிட்டு அதை தூக்கி எறிவது போல் நடித்தார். இயக்குனருக்கும் மகிழ்ச்சி’
நடிப்பிலும் சில கொள்கைகளை எம்.ஜி.ஆர் கடைபிடித்தார் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம் ஆகும்.
Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என...
Ajith Vijay: கோலிவுட்டில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வருபவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். சின்ன பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்திருக்கிறார்....
Seeman: இயக்குனர் மணிவண்ணனிடம் சில படங்களில் வேலை செய்தவர் சீமான். மேலும் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே, வீரநடை ஆகிய 5...
Vijay TVK: சினிமாவில் உச்சம் தொட்டு அடுத்து அரசியலிலும் சாதிக்கவேண்டும் என்ற முனைப்போடு வந்தார் விஜய். ஆரம்பத்தில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான...
Vijay: தற்போது அரசியல் களத்தில் தவெக கட்சிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் பெரும்...