
Cinema News
கார்த்தி நடிப்பில் சரத்குமார் தயாரித்த படம்!… வெளிவர்றதுக்குள்ள படாத பாடு பட்டுட்டார்!..
Published on
By
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக நடித்து தற்சமயம் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் சரத்குமார். சினிமாவில் வில்லனாக அவர் தோன்றிய காலகட்டம் முதல் அவருக்கு தொடர்ந்து வரவேற்பு இருந்து கொண்டே வந்தது.
அதிலும் முக்கியமாக அவர் நடித்த சூரிய வம்சம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது. அதன் பிறகு தொடர்ந்து அதைப்போன்ற குடும்ப பாணியிலான கதைகளில் அதிகமாக நடித்தார்.
sarathkumar
சரத்குமார் அப்போதிலிருந்து இப்போது வரை தனது உடலை சரியாக மேம்படுத்தி வருகிறார். இப்போதும் கூட அவரது வயதே தெரியாத அளவில் தான் இருக்கிறார். தற்சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார்.
சரத்குமார் தயாரித்த படம்:
சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் சரத்குமார் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். படம் தயாரிப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை அறியாமல் கண்சிமிட்டும் நேரம் என்கிற திரைப்படத்தை 1980களில் தயாரித்தார் சரத்குமார்.
அப்போதைய காலகட்டத்தில் நடிகர் கார்த்திக் கொஞ்சம் பிரபலமான கதாநாயகனாக இருந்ததால் அவரை அந்த படத்தில் நாயகனாக வைத்து தயாரித்தார். இந்த படத்தை கலைவாணன் கண்ணதாசன் இயக்கினார்.
இந்த படத்திற்கு சரத்குமார் எதிர்பார்த்ததை விட அதிக செலவு ஆனது அதனால் படத்தை எடுத்து முடிப்பதற்கு நீண்ட நாட்கள் ஆனது. இந்த படம் முழுதாக எடுத்து முடிக்கப்பட்டு வெளியாகும் என்பதே சரத்குமாருக்கு சந்தேகமான விஷயமாக இருந்தது.
ஆனால் ஒரு வழியாக கஷ்டப்பட்டு அந்த படத்தை முழுதாக முடித்து வெளியிட்டார் சரத்குமார். பெரிய வெற்றியை படம் கொடுக்க விட்டாலும் டீசண்டான ஒரு வெற்றியை கொடுத்தது. அவ்வளவு கஷ்டப்பட்ட பிறகும் கூட தயாரிப்பை விட்டு வெளியே செல்லாமல் அடுத்தும் படங்களை தயாரித்தார் சரத்குமார்.
இதையும் படிங்க: தனது டூப்பு நடிகருக்கும் அள்ளி கொடுத்த எம்.ஜி.ஆர்!.. அட இவ்வளவு செஞ்சிருக்காரா!..
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...