விஜயை இயக்கும் அந்த ஜோசியர்.. மேல உட்கார்ந்துகிட்டு ஆட்டிப்படைக்கும் ஆசாமி..

Published on: June 19, 2023
vijay
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் படங்கள் சினிமாவிற்கு ஒரு பெரிய வசூலையே பெற்றுதரும் படமாக அமைந்து வருகின்றன. கோலிவுட்டின் வசூல் மன்னனாக திகழ்ந்துவருகிறார் விஜய்.

மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் விஜய் தற்போது ஒரு பெரிய விழாவை நடத்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். அவரின் அரசியல் பார்வை மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் தான் இருக்கிறது. மேடையில் அவர் பேசிய பேச்சும் தெளிவாக இருந்தது.

vijay1
vijay1

தன்னுடைய ஒவ்வொரு அசைவையும் யோசித்து பார்த்து தான் வைக்கிறார் விஜய். இதற்கெல்லாம் முலக்காரணமாக இருப்பது ஒரு நபர் என்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது திண்டிவனத்தில் ஒரு ஜோசியர் இருக்கிறாராம்.

அவர் சொல்றத தான் விஜய் இன்று வரை கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அதுவும் இந்த விழா எப்பொழுது நடத்த வேண்டும் எந்த நேரத்தில் நடத்த வேண்டும் என்பதையும் அந்த ஜோசியர் தான் சொன்னாராம். மேலும் சசிகலா மற்றும் தினகரன் இவர்கள் கூட இந்த ஜோசியரைத்தான் அணுகுவார்களாம். ஏன் ஜெயலலிதா கூட இவரிடம் ஆலோசனைகள் கேட்டிருக்கிறாராம்.

vijay

அதனால், தான் சம்பந்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளை அந்த ஜோசியரிடம் சொல்லித்தான் செய்கிறாராம் விஜய். இது  மாதிரியான ஒரு ஜோசியரை வைத்துக் கொண்டு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என சில காரியங்களை சாதித்து வருகின்றனர். இப்பொழுது அந்த லிஸ்டில்  விஜயும் சேர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க : நடிகைகள் பத்தி நீங்க சொல்றது உண்மையில்லை.. ராதிகாவின் பேச்சால் ஆவேசமான பாக்கியராஜ்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.