Cinema News
தேவர்மகன் படத்தை ஒழுங்கா பாத்தியா?.. மாரிசெல்வராஜை வச்சி செய்யும் கமல் ரசிகர்கள்…
தேவர் மகன்:
கமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்து 1992ம் வருடம் வெளியான திரைப்படம் தேவர் மகன். இப்படத்தில் கமலின் அப்பாவாக சிவாஜி நடித்திருப்பார். இப்படத்தில் இசக்கி எனும் வேடத்தில் வடிவேல் நடித்திருப்பார். தேவர் சமுதயாயத்தை கமல் சொந்த ஊருக்கு வருவார். அங்கு ஒரு குடும்ப பஞ்சாயத்து ஊர் பிரச்சனையாக இருப்பதை பார்த்து அது பிடிக்காமல் வெளிநாட்டுக்கு செல்ல முடிவெடுப்பார்.
பட கதை:
ஆனால், சிவாஜியின் மறைவுக்கு பின் அந்த ஊர் மக்களை வன்முறையைலிருந்து மீட்டு அமைதியான வாழ்க்கையை கொடுக்க முயற்சி செய்வார். ஆனால், நாசரால் அது முடியாமல் போகும்போது வேறுவழியில்லாமல் கமலும் வன்முறையை கையில் எடுப்பார். நாசரை கொன்றுவிட்டு ‘இப்படி இருக்காதீங்கடா.. புள்ளக்குட்டிய படிங்க வைங்கடா’ என சொல்லிவிட்டு எந்த ரயிலில் ஊருக்கு வந்தாரோ அதே ரயிலில் சிறைக்கு செல்வார். இதுதான் தேவர் மகன் படத்தின் கதை.
மாரி செல்வராஜ்:
ஆனால், படத்தின் தலைப்பு தேவர் மகன் என இருப்பதால் குறிப்பிட்ட சாதியை பெருமைப்படுத்தியே கமல் படம் எடுத்ததாக பலரும் நினைத்துக்கொண்டனர். அந்த படம் மூலம் கமல் சொன்ன அறிவுரையை பலரும் புரிந்துகொள்ளவில்லை. இதில், இயக்குனர் மாரி செல்வராஜும் ஒருவர். சமீபத்தில் கூட மாமன்னன் பட விழாவில் பேசிய மாரிசெல்வராஜ் ‘தேவர் மகன் படம் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளானேன்.
இது சரியா.. இப்படி சொல்லலாமா?.. என என்னுள் பல குழப்பம்.. தேவர்மகன் படத்தில் இசக்கிய் கதாபாத்திரமாக வரும் வடிவேலுதான் என் அப்பன். அந்த கதாபாத்திரத்தின் தொடர்ச்சிதான் மாமன்னன்’ என பேசினார். மேலும், தேவர் மகன் பார்த்துவிட்டுதான் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை எடுத்தேன் என கமலை வைத்துக்கொண்டே கூறினார்.
இதையடுத்து கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் பலரும்,குறிப்பாக கமல் ரசிகர்கள் மாரி செல்வராஜை திட்டி தீர்த்து வருகின்றனர். தேவர் மகன் படத்தின் கதையையே மாரிசெல்வராஜ் சரியாக புரிந்து கொள்ளாமால் அப்படத்தில் கமல் ஏதோ தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக காட்சி வைத்திருப்பது போல் பேசியுள்ளார்.
அப்படம் வெளியான போது மாரி செல்வராஜுக்கு 8 வயது. அந்த வயதில் அவருக்கு அப்படி என்ன குழப்பம் வந்தது. அதோடு, அந்த படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம் கோவில் பூட்டை உடைக்கும்போது ‘தெற்கத்தி கள்ளனடா தென்மதுரை பாண்டியனடா’ என பாட்டு பாடிக்கொண்டே உடைப்பார். எனவே, அவரும் கதைப்படி தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்தான்.
இதுகூட மாரி செல்வராஜுக்கு தெரியவில்லை என அவருக்கு எதிராக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.