Connect with us

Cinema News

விவேக் இறந்ததை மட்டும் பேசுறீங்க!. அந்த ரெண்டு பேர் பத்தி யாருமே பேசல.. ஆதங்கப்பட்ட ராதாரவி…

தமிழ் சினிமாவில் பல காலங்களாக வில்லனாக நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ராதாரவி. ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் பெரும் நாயகர்களாக இருந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தவர் ராதாரவி.

சாதரண வில்லன் என்பதை தாண்டி பல ரஜினி படங்களில் நகைச்சுவையான ஒரு வில்லனாக நடித்திருப்பார் ராதாரவி. இதனால் வில்லனாக இருந்தாலும் ராதாரவியை மக்கள் ரசித்தனர். அவரது நடிப்பில் எம்.ஆர் ராதாவின் சாயலும் அதிகமாக இருந்தது.

பிறகு சினிமாவில் ட்ரெண்ட் மாறியபோது ராதா ரவிக்கு வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்தன. அதனை தொடர்ந்து திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார் ராதா ரவி.

ஆதங்கப்பட்ட ராதா ரவி:

2020 ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமா பல கஷ்டங்களை சந்தித்தது. முக்கியமாக பல கலைஞர்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமா இழந்துள்ளது. விவேக், மனோபாலா, மயில்சாமி,சரத்பாபு என வரிசையாக முக்கிய நடிகர்கள் காலமானார்கள்.

இதுக்குறித்து சமீபத்தில் ராதா ரவியிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கும்போது, மீடியாவில் உள்ள பலரும் விவேக், மனோபாலா போன்ற பிரபலங்கள் இறப்பை வெகுவாக பேசுகிறீர்கள். ஆனால் அதே காலக்கட்டத்தில்தான் இயக்குனர் விசு, டி.பி கஜேந்திரன் இருவரும் இறந்தனர். ஆனால் யாருமே அதை பற்றி பெரிதாக பேசவில்லை. என கவலை தெரிவித்திருந்தார் ராதா ரவி.

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top