இரண்டு ஹாலிவுட் படங்களின் கதையை சுட்டு எம்.ஜி.ஆர் எடுத்த படம்!.. ரிசல்ட் என்ன தெரியுமா?…

Published on: June 23, 2023
mgr
---Advertisement---

ஹாலிவுட் படங்களில் கதைகளை சுட்டு தமிழில் எடுப்பது என்பது இப்போதுதான் இயக்குனர்கள் செய்கிறார்கள் என பலரும் நினைக்கிறார்கள். இது கருப்பு வெள்ளை சினிமா முதல் அதாவது எம்.ஜி.ஆர் – சிவாஜி காலம் முதல் இருக்கிறது. 1930 முதல் 1960 வரை வந்த பல ஹாலிவுட் படங்களின் கதையை கொஞ்சம் தமிழுக்கு ஏற்றதுபோல் மாற்றி பல எம்.ஜி.ஆர் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சில படங்கள் ஆங்கில நாவலை அடிப்படையாக வைத்தும் உருவாகியுள்ளது.

mgr

எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’ திரைப்படம் கூட ‘Come September’ என்கிற படத்தின் தழுவல்தான். இதுபோல் இன்னும் பல உதாரணங்கள் இருக்கிறது. இப்போது போல அப்போது சமூகவலைத்தளங்கள் இல்லாத காலம் என்பதால் ரசிகர்களால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

எம்.ஜி.ஆர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நேரத்தில் பி.யு சின்னப்பா ஏற்கனவே நடித்து வெளியான ‘உத்தம புத்திரன்’ படத்தை மீண்டும் எடுத்து அதில் தானே இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அந்த படத்தின் உரிமையை மாடர்ன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி அதில் சிவாஜியை நடிக்க வைப்பது என முடிவெடுத்து விளம்பரமும் செய்தார்கள் என்பதை கேள்விப்பட்டு அந்த முயற்சியை கைவிட்டார்.

nadodi
nadodi

ஆனாலும், இரட்டை வேடத்தில் நடித்து ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தது. எனவே ஹாலிவுட்டில் வெளிவந்த The Prisoner of Zenda மற்றும் If I Were King ஆகிய படங்களின் கதைக்கருவை எடுத்து தனது கதை இலகாவுடன் இணைந்து ஒரு கதையை உருவாக்கினார். அப்படி உருவான படம்தான் நாடோடி மன்னன்.

Nadodi Mannan
Nadodi Mannan

இந்த படத்தை முதலில் வேறு ஒரு இயக்குனர்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவரால் சரியாக செய்யமுடியவில்லை. எம்.ஜி.ஆரே இயக்கினால் படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி சொல்ல அண்ணனின் பேச்சை ஏற்று எம்.ஜி.ஆரே தயாரித்து, இயக்கி நடித்தார். பல தடைகளை தாண்டி நாடோடி மன்னன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.