அந்த எண்ணத்தையே சுக்குநூறாக உடைத்த இளையராஜா! ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Published on: June 24, 2023
rahman
---Advertisement---

தமிழ் சினிமாவில் 70 ஆண்டுகளாக கிட்டத்தட்ட தன்னுடைய இசையால் பெரிய ராஜ்ஜியத்தையே கட்டி வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி என்ற படத்தில் முதன் முதலாக தன் சினிமா அனுபவத்தை தொடங்கிய இளையராஜா இன்று வரை இளம் தலைமுறையினருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.

rahman1
rahman1

இசை மன்னனாக இசை ஜாம்பவானாக இசையில் மேலோங்கி நிற்கும் ஒருவருக்கு என்ன பெயர் எல்லாம் கொடுக்கப்படுமோ அத்தனை அடைமொழிகளுக்கும் சொந்தக்காரராக திகழ்ந்தவர் இளையராஜா. 70 80களில் எல்லாம் இவருடைய இசைக்காக ஏராளமான தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என அனைவரும் வரிசை கட்டிக்கொண்டு நிற்பார்களாம்.

இவரை பார்ப்பதையே ஒரு கடவுளை பார்ப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பாராம் இளையராஜா. ரெக்கார்டிங் தியேட்டருக்குள் இளையராஜா இருக்கும்போது லேசாக அந்த அறையின் கதவு திறந்து மூடப்படும் நேரத்தில் கூட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவை பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டு இருப்பார்களாம்.

rahman2
rahman2

அந்த அளவுக்கு மிகவும் பிசியாக ஒரு நாளைக்கு ஐந்து ஆறு படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தாராம் இளையராஜா. இந்த நிலையில் இளையராஜாவிடம் கீ போர்டு பிளேயராக இருந்தவர் தான் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கும் இளையராஜாவிற்கும் இடையில் ஏதோ வித மனக்கசப்புகள் இருப்பதைப் போன்றே பல செய்திகள் வந்து கொண்டிருந்தன.

ஆனால் அவை எல்லாம் உண்மை இல்லை என்பதைப் போல ஏ.ஆர்.ரகுமானின் ஒரு பேட்டி இணையத்தில் வைரல் ஆகின்றது. அதாவது இளையராஜாவிடம் எனக்கு மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் இருக்கின்றது என்று ரகுமான் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். என்னவென்றால் இசை அமைப்பாளர்கள் என்றாலே மது குடிப்பவர்கள் ஆகவும் பெண்களுடன் இருப்பவர்கள் ஆகவும் பல கெட்ட பழக்கவழக்கங்களுக்கு ஆளானவர்களாகவும் இருப்பார்கள் என்ற ஒரு பிம்பம் இருந்து வந்தது . ஆனால் அதை எல்லாம் சுக்கு நூறாக உடைத்தவர் இளையராஜா என்று ரகுமான் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

rahman3
rahman3

மேலும் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் ஒரு சாமியாராக இசையை மட்டுமே கடவுளாக போற்றி வருபவர் இளையராஜா. இந்த ஒரு கேரக்டர் அவரிடம் இருக்கப் போயிதான் அவரைப் பார்த்தாலே அனைவரும் பயப்படுகிறார்கள். இந்த ஒரு விஷயம் தான் எனக்கு மிகவும் கவர்ந்தது என்று ரகுமான் கூறினார்.

இதையும் படிங்க : ரேப் சீனுக்காகவே ஒரு பாடலா? திக்குமுக்காடிய எம்.எஸ்.வி! என்ன பண்ணியிருப்பார்?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.