சினிமா உலகை கலக்கிய எம்.ஜி.ஆரின் பன்ச் வசனங்கள்!.. அப்பவே அவர் செம மாஸ்!…

Published on: June 25, 2023
mgr
---Advertisement---

சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி 37 வயது வரை நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்தவர்தான் எம்.ஜி.ஆர். துவக்கம் முதலே ஆக்‌ஷன் காட்சிகளில் அதிகம் நடித்து தன்னை ஆக்‌ஷன் ஹீரோவாக புரமோட் செய்து கொண்டார். எம்.ஜி.ஆர் படம் எனில் வாள் சண்டை சிறப்பாக இருக்கும் என்பது 50,60 களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

mgr

அதை புரிந்து கொண்டு எம்.ஜி.ஆரும் அவரின் படங்களில் பல சண்டை காட்சிகளில் நடித்தார். எம்.ஜி.ஆர் படங்களில் வாள் சண்டை மட்டுமல்ல. வசனங்களும் அனல் பறக்கும். கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பலரும் எம்.ஜி.ஆரின் சரித்திர படங்களுக்கு வசனம் எழுதியுள்ளனர்.

சினிமாவில் பன்ச் வசனம் எனில் அது ரஜினி, விஜய்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் பல பன்ச் வசனங்கள் இடம் பெற்றிருந்தது. அதாவது பன்ச் வசனத்திற்கு முன்னோடியே எம்.ஜி.ஆர்தான். மர்மயோகி படத்தில் எம்.ஜி.ஆர் ஏற்ற கதாபாத்திரம் கரிகாலன். அந்த படத்தில் ‘கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான். தவறுமனால் குறி வைக்க மாட்டான்’ என பன்ச் வசனம் பேசுவார்.

mgr

‘என் எதிரி கூட எனக்கு சமமா இல்லனா அலட்சியப்படுத்துறவன் நான்’… குடை பிடிச்சா சூரியன் மறையாது.. உங்க முகம்தான் மறையும்.. ஆகிய பன்ச் வசனங்களை சந்திரோதயம் படத்தில் பேசியிருப்பார். அதேபோல், ‘அழறவங்கள சிரிக்க வைக்கணும்.. சிரிக்கிறவங்களை சிந்திக்க வைக்கணும்’.. என அவர் பேசிய பன்ச் வசனங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ‘மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’என நம்பியார் கோபமாய் கேட்க எம்.ஜி.ஆரோ ‘சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடிப்போகும்’ என பன்ச் அடிப்பார்.

MGR
MGR

அடிமைப்பெண் படத்தில் ‘நீங்கள் மாளிகையிலிருந்து மக்களை பார்க்கிறீர்கள்.. நான் மக்களோடு மக்களாக நின்று மாளிகையை பார்க்கிறேன்’ என பேசியிருப்பார். அதேபோல், என்னை நம்பி கெட்டவர்கள் யாருமில்லை.. நம்பாமல் கெட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள்’ என பேசியிருப்பார்.

எம்.ஜி.ஆர் பேசிய பல பன்ச் வசனங்கள் அவரின் ரசிகர்களுக்கு வேதவாக்காக இருந்தது. எம்.ஜி.ஆருக்கு பின் நடிகர் ரஜினி தனது படங்களில் பன்ச் வசனங்களை பேசி ரசிகர்களை கவந்தார். இப்போது விஜய் உள்ளிட்ட பல நடிகர்களும் பன்ச் வசனங்களை பேச துவங்கிவிட்டனர்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.