Connect with us

Cinema History

அந்த மாதிரி பண்ணுனா எனக்கு பிடிக்காது!.. ஜெயலலிதா வீட்டிலும் கெத்து காட்டிய பொன்னம்பலம்…

தமிழ் சினிமாவிற்கு ஸ்டண்ட் மேனாக அறிமுகமானவர் நடிகர் பொன்னம்பலம். சின்ன சின்ன சண்டை காட்சிகளுக்கு டூப் போடுவது, நடிப்பது என்று தமிழ் சினிமாவிற்கு வந்த பொன்னம்பலம் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த தொடங்கினார்.

ஏற்கனவே ஸ்போட்ஸில் இருந்தவர் பொன்னம்பலம் என்பதால் அவருக்கு சண்டைக் காட்சிகள் எளிமையானதாக இருந்தன. அப்போது இருந்த ஸ்டேட்மேன்களில் இவரது சண்டைகள் சிறப்பாக இருந்ததால் அப்போதைய ஸ்டண்ட் மேன்கள் 5000, 10,000 என சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார் பொன்னம்பலம்.

ponnambalam

ponnambalam

ரஜினிக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தார் பொன்னம்பலம். அதேபோல விஜய் முதல் படம் நடிக்கும் பொழுது அவருக்கும் பல உதவிகளை செய்துள்ளார் பொன்னம்பலம். மேலும் நடிகை ஜெயலலிதாவுடன் நல்ல பழக்கத்தில் இருந்தார்.

பொன்னம்பலம் வைத்த கோரிக்கை:

ஜெயலலிதா அரசியலுக்கு சென்று முதலமைச்சர் ஆன பிறகு பொன்னம்பலத்தை அழைத்தார். பொன்னம்பலத்திற்கு அரசியல் ரீதியாக ஏதாவது பதவி வேண்டுமா என்று கேட்டார் ஜெயலலிதா. அதற்கு பதில் அளித்த பொன்னம்பலம் எனக்கு உங்களிடம் பதவி எல்லாம் வேண்டாம். நான் உங்கள் வீட்டிற்கு வந்தால் என்னை வெளியில் காக்க வைக்காமல் உடனே உள்ளே விட வேண்டும். நீங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னை உள்ளே விட வேண்டும் அது மட்டும்தான் எனக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார் பொன்னம்பலம்.

jayalalitha

jayalalitha

ஏனெனில் அப்போது இருந்த எம் எல் ஏ, அமைச்சர்களே ஜெயலலிதாவின் அனுமதியை பெற்ற பிறகுதான் வீட்டிற்குள் செல்ல முடியும். அதுவரை அவர்கள் வீட்டு வாசலில்தான் இருப்பார்கள். ஆனால் பொன்னம்பலம் இப்படி ஒரு உரிமையை கேட்டதும் ஜெயலலிதாவும் அங்கு இருந்த ஊழியர்களை அழைத்து பொன்னம்பலம் வந்தால் மட்டும் அவரை நிறுத்தக்கூடாது என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு ஒரு நூறு தடவை ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்றிருப்பேன் நான் வரும்பொழுது பொன்னம்பலம் வருகிறார் என ஒருவர் உடனே தகவல் அளித்துவிடுவார் உடனே கதவை திறந்து விடுவார்கள். ஆனால் பெரிய பெரிய பதவியில் உள்ளவர்கள் வெளியில் காத்திருப்பார்கள் அவர்களையெல்லாம் என்னை பார்த்து பொறாமைப்படுவார்கள் என்று பொன்னம்பலம் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சுந்தர்.சியை கோபப்படுத்திப் பார்த்த நடிகையின் அம்மா! ஆத்திரத்தில் அவர் சொன்னதுதான் ஹைலைட்

google news
Continue Reading

More in Cinema History

To Top