அறிமுகம் செய்த இயக்குனரிடம் நன்றி மறந்த ராஷ்மிகா.. காதல் விவகாரம்தான் காரணமா?

Published on: June 27, 2023
---Advertisement---

தென்னிந்திய சினிமாவில் இருந்து வரும் கதாநாயகிகளில் முக்கியமானவர் நடிகை ராஸ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாவிலேயே பெரிதாக வரவேற்பு பெறாமல் இருந்த சினிமா கன்னட சினிமாதான்.

ஆனால் அப்படிப்பட்ட கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்சமயம் தெலுங்கு,தமிழ் என்ற இரு மொழிகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் ராஷ்மிகா.

சுல்தான் திரைப்படத்தில் நடித்த பிறகு தமிழிலும் ராஷ்மிகாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் வாய்ப்பாக வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக நடித்தார் ராஸ்மிகா. விஜய்யின் பெரும் ரசிகை என்பதால் ஒரு படமாவது விஜய்யுடன் நடித்து விட வேண்டும் என்று ஆர்வத்தில் இருந்தார். அந்த நிலையில் வாரிசு படத்தில் வந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டார்.

rashmika
rashmika

ஆனால் அவரை சினிமாவிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ரிஷப் ஷெட்டி. சில காலங்களுக்கு முன்பு அவர் இயக்கி வெளியான காந்தாரா திரைப்படம் இந்தியா அளவில் பெரிதாக பேசப்பட்டது. பெரும் வசூலையும் ஈட்டி கொடுத்தது.

இயக்குனரை மதிக்காத ராஷ்மிகா:

தமிழ் நடிகர் ரஜினிகாந்தில் துவங்கி பல நடிகர்களும் பிரபலங்களும் அந்த படத்திற்காக ரிஷப் ஷெட்டியை வாழ்த்தியிருந்தனர். ஆனால் ராஷ்மிகா மட்டும் எந்த ஒரு வாழ்த்துக்களும் தெரிவிக்கவில்லை. பிறகு ஒரு முறை பத்திரிகையாளர்கள் அவரிடம் காந்தாரா திரைப்படம் குறித்து கேட்ட பொழுது அந்த படத்தை நான் பார்க்கவே இல்லை எனக் கூறிவிட்டார் ராஷ்மிகா.

rashmika rakshad shetty
rashmika rakshad shetty

ஏன் அவர் அப்படி கூறியுள்ளார் என பார்க்கும் பொழுது அந்த படத்தின் திரைக்கதையில் ரக்‌ஷத் ஷெட்டி என்னும் நடிகர் வேலை பார்த்துள்ளார். ரக்‌ஷத் ஷெட்டியும் ராஷ்மிகாவும் சேர்ந்து ஒரே படத்தில் தான் அறிமுகமானார்கள்.

அப்போது ராஷ்மிகாவுக்கும் அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது அது நிச்சயதார்த்தம் வரை சென்று பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த காரணத்தினால்தான் காந்தாரா திரைப்படம் குறித்து ராஷ்மிகா எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சூர்யா மட்டும் இல்லைன்னா சிக்கியிருப்பேன்! சீக்ரெட்டை உடைத்த உதயநிதி

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.