தமிழ் சினிமாவில் மிகக் குறைந்த வயதில் நடிக்க வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகை ரேவதி. இவர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை. சினிமாவில் நடிக்க வரும்போது ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானார். இவர் எல்லாம் ஒரு நடிகையா இது என்ன மூஞ்சி? என்று பல விமர்சனங்கள் இவர் மீது பாய்ந்தன.

ஆனால் பாரதிராஜா மனசு வைத்த ஒரே காரணத்தால் மண்வாசனை என்ற படத்தின் மூலம் முதலில் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டானார் ரேவதி.
17 வயது தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த ரேவதி மூன்று வருடங்களில் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தார். தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்த ரேவதி நடிகரும் ஒளிப்பதிவாளருமான சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது வாழ்க்கை சுமூகமாக போன நிலையில் பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருவரும் தவித்து வந்தனர். அதன் காரணமாக இருவருக்குள்ளும் ஏராளமான கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அதுவே இவர்கள் பிரிவுக்கு காரணமாக அமைந்தன.
அதன் பிறகு இருவரும் முறையாக விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் எதை வைத்து தன்னை ஒதுக்கினார்களோ அதையே பின்னாளில் சரி செய்தார் ரேவதி. ஒரு டெஸ்ட் டியூப் மூலமாக குழந்தையை பெற்றெடுத்தார் ரேவதி.

அதுதான் இனிமே தன்னுடைய உலகம் என்றும் எல்லாமே இனிமேல் என் குழந்தை தான் என்றும் இன்றுவரை ரேவதி தன் குழந்தையுடன் தனியாகவே வாழ்ந்து வருகின்றார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் தலைகாட்டிய ரேவதி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் சீரியல்களிலும் ஒரு சில படங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
