லைப் டோட்டல் வேஸ்டா போச்சு..! புலம்பும் காஞ்சனா பட திருநங்கை பிரியா!..

Published on: June 27, 2023
transgender-priya
---Advertisement---

தன் வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு காஞ்சனா திரைப்படத்தில் நடித்தது தான் என திருநங்கை பிரியா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று கூறியிருக்கிறார்.

திரை உலகில் படங்களில் நடிக்க வேண்டும் என்று பலவிதமான கனவுகளை தன்னுள் கொண்டு வரும் நபர்கள் அனைவரும் ஒரு படத்துக்குப் பிறகு வாய்ப்புக்கள் கிடைக்காமல் தடுமாறி வருகிறார்கள்.

Sarath Kumar in Kanchana, Sarathkumar Kanchana Movie Images | Moviegalleri.net
transgender-priya

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 20 பதினொன்றாம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் காஞ்சனா எந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்ததோடு வெற்றி திரைப்படமாகவும் அமைந்தது.

நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமான எந்த திரைப்படத்தில் கோவை சரளா ராய் லட்சுமி ஸ்ரீமன் தேவதர்ஷினி போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் அற்புதமாக தனது நடிப்பை திருநங்கை கதாபாத்திரத்தில் வெளிப்படுத்து இருப்பார். பார்ப்பதற்கு அச்சு அசல் திருநங்கை போலவே தனது அசத்தல் நடிப்பில் சரத்குமார் மக்களை வெகுவாக இந்த படத்தின் மூலம் கவர்ந்து விட்டார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்த திருநங்கை பிரியா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவர் காஞ்சனா படத்தில் நடித்து தன் வாழ்க்கையை வீணாக்கி விட்டதாக கூறியிருக்கிறார்.

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு காஞ்சனா படத்தில் நடித்தது தான்.. திருநங்கை பிரியா ஷாக்கிங் பேட்டி | Transgender Priya Interview About Kanchana Movie
transgender-priya

இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு இவர் தனது வாழ்க்கையை சிறப்பான முறையில் வாழ்ந்து வந்ததாகவும் இந்த படத்தில் நடித்த பிறகு மக்கள் மத்தியில் இவரிடம் பல கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக அனைவரும் நினைப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் திணறி வருவதாக கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு பல திரைப்படங்கள் வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு வேறு ஏதும் திரைப்படங்கள் கிடைக்காத காரணத்தால் சாமானிய நிலையில் தான் இருப்பதாகவும் வருத்தத்தோடு கூறியிருக்கிறார்.

மேலும் இந்த பேட்டியை அடுத்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் ஏதேனும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Brindha

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.