இனிமே எல்லாமே சரவெடி!.. ஸ்கெட்ச் போட்டு ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்!.. வா தல வா வா!…

Published on: June 27, 2023
ajith
---Advertisement---

கோலிவுட்டில் அனல் பறக்கும் போட்டியாக பார்க்கப்படுவது அஜித் மற்றும் விஜய்க்கு இடையில்தான். அதிலும் குறிப்பாக அவர்களின் ரசிகர்கள் பண்ணும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இருவரில் யாராவது படம் முதலில் வந்தால் என் தலைவன் எப்படி ஓடி வந்தான் பாத்தீயா? நீங்க ஆமை வேகத்தில் போறீங்க என்று உருவகப்படுத்தியே வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ajith1
ajith1

அதன் உச்சக்கட்டமாக பெரிய விவாதமாகவே மாறிவிடும். அதற்கு இடம் கொடுக்கும் விதமாகத்தான் அஜித்தின் செயலும் சமீபகாலமாக இருந்தது. அவரின் செய்கைகளை பார்த்த சில பேரே சினிமா மீது அஜித்திற்கு இருக்கும் ஆர்வம் குறைந்து விட்டதா என்றுதான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

சினிமாவை விட பைக் ரேஸ் மீதுதான் அஜித்திற்கு அலாதியான அன்பு. விக்னேஷ் சிவன் – ஏகே 62 பட விவகாரம் சமயத்தில் கூட கூலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆனால் இந்தப் பக்கம் விஜய் அடுத்தடுத்து படங்களின் லிஸ்டை ஏற்றிக் கொண்டே போனார்.

ajith2
ajith2

மேலும் விஜய் இயக்குனர்களை தேர்வு செய்வதிலும் மிகவும் கவனமாக இருப்பார். அந்த விஷயத்தில் அஜித் கொஞ்சம் வொர்ஸ்ட் தான். அதனால் அஜித் இதையெல்லாம் இப்போது  கவனத்தில் கொண்டு ஒரு புது வியூகம் வகுத்திருக்கிறாராம்.

இனிமேல் தன்னுடைய முறையை மாற்றிக் கொள்ள வேண்டும், புது புது இயக்குனர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும், பல பேர் காம்பினேஷனில் வேலை செய்ய வேண்டும் என்று வெறி கொண்டு அலைகிறாராம் அஜித்.

இதையும் படிங்க : மணிரத்தினத்தை கால்கடுக்க காக்க வைத்த இளையராஜா!.. அங்கதான் எல்லாம் ஸ்டார்ட் ஆச்சி!..

ஆகவே வருங்காலங்களில் அஜித்தை ஒரு புதுமையான பார்வையில் பார்க்கப் போகிறீர்கள் என்று கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள். ஆனாலும் சில பேர் முதலில் இந்த விடாமுயற்சிக்கு வழி சொல்லுங்கள் என்று தங்கள் வேதனையை தெரிவித்தும் வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.