தமிழ் சினிமாவில் ஒரு ஆகச் சிறந்த நடிகராக விளங்கியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். நடிகராக, தயாரிப்பாளராக, அரசியல்வாதியாக தன்னுடைய எல்லா பரிணாமங்களிலும் ஒரு முதன்மை மனிதராகவே காணப்பட்டார். இளமை காலம் முதல் பல நாடகக் குழுக்களில் மிகவும் பிரபலமாக விளங்கினார் எம்ஜிஆர்.

வெற்றிமன்னன்
காந்திய கொள்கை மீது தீவிர பற்று கொண்டவராக விளங்கிய எம்ஜிஆர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து 30 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவை தன்னுடைய ஆதிக்கத்தில் கொண்டு வந்தார். நடிகர் என்பதில் புகழ்பெற்று இருந்தாலும் அதற்கு சமமான வெற்றியை அரசியலிலும் படைத்தார் எம்ஜிஆர்.
ஏழைகளுக்கு தோழனாகவும் இல்லாதவருக்கு கொடையாளியாகவும் தனது மனிதநேய பண்புகளின் மூலம் மிகவும் பிரபலமானார். 1936 ஆம் ஆண்டில் சதி லீலாவதி என்ற படத்தில் ஒரு துணை நடிகர் கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்தார் எம்ஜிஆர். கிட்டத்தட்ட 40க்கு பிறகு தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க எம்ஜிஆருக்கு வாய்ப்புகள் வந்தன.

தொடர் வெற்றி கண்ட எம்ஜிஆர்
தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் முதன் முதலில் தயாரித்து இயக்கி நடித்த படமாக நாடோடி மன்னன் திரைப்படம் விளங்கியது. அந்தப் படம் பெரிய அளவில் ஓடி வெற்றி பெற்று மக்கள் மனதில் ஒரு நீங்கா இடத்தை பெற்றது. அதனைத் தொடர்ந்தும் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களையும் இயக்கி தயாரித்து நடித்தார்.
மக்கள் நலனே தன்னுடைய நலன் என்று விளங்கிய எம்ஜிஆர் கஷ்டப்படுபவருக்கு தன்னால் இயன்ற உதவிகளை வாரி வாரி வழங்கினார். தன்னை வைத்து ராஜா தேசிங்கு, விக்ரமாதித்தன் போன்ற பல படங்களை இயக்கியவர் டி ஆர் ரகுநாத். இவர் எம்ஜிஆர் படங்கள் மட்டுமில்லாமல் சிவாஜிக்கு பல வெற்றி படங்களை கொடுத்தவர்.
எம்ஜிஆரை விட்டு பிரிந்து சென்ற இயக்குனர்
ஒரு கட்டத்தில் எம்ஜிஆருக்கும் ரகுநாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட எம்ஜிஆரை விட்டு பிரிந்து சென்றார் ரகுநாத். சில ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட எம்ஜிஆர் ஒருநாள் ரகுநாத்தை பற்றி அறிய விரும்பினார். அப்பொழுது ரகுநாத் எந்த ஒரு பட வாய்ப்புகளும் இன்றி வறுமையில் வாடுவதாக கேள்விப்பட்டார் எம்ஜிஆர்.

உடனே அவர் இருக்கும் இடத்தை அறிந்த எம்ஜிஆர் தன்னுடைய உதவியாளரிடம் ஒரு லட்சம் தொகையை கொடுத்து அனுப்பி அவருக்கு கொடுக்க சொல்லி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததும் வீட்டு வசதி வாரியம் சார்பில் ரகுநாத்திற்காக ஒரு வீட்டையும் கொடுத்து இருக்கிறார் எம்ஜிஆர். தன்னுடன் கருத்து வேறுபாடு இருந்த போதிலும் இயக்குனர்கள் மீது எந்த அளவிற்கு மரியாதை வைத்திருந்தார் எம்ஜிஆர் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது.
இதையும் படிங்க :ஒரு சைக்கோவை ‘மாமன்னனா’ காட்டினா ஏத்துக்குவோமா? வேண்டாத வேலை பார்த்த மாரிசெல்வராஜ்
