Cinema History
மகிழ் திருமேனியும் பார்த்திபனும் சேர்ந்து என் சோலிய முடிச்சிவிட்டாங்க… புலம்பிய தயாரிப்பாளர்!..
தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பது படத்தின் இயக்குனர்தான். என்னதான் ஹீரோவுக்காக படங்கள் ஓடுவதாக கூறினாலும், இயக்குனர் படத்தை ஒழுங்காக இயக்காவிட்டால் அந்த படம் வெற்றி பெறாது. சுறா,லிங்கா, கோச்சடையான் போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
ஆனால் ஒரு படம் தோல்வி அடையும்போது அதனால் பெரிதாக பணத்தை இழப்பது படத்தின் தயாரிப்பாளர்தான். அப்படி ஒரு சம்பவம் தமிழின் பிரபல தயாரிப்பாளருக்கு நிகழ்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் 1993 காலக்கட்டம் முதலே தயாரிப்பாளராக இருந்து வருபவர் மாணிக்கம் நாராயணன். இவர் செவன்த் சேனல் கம்யூனிகேஷன் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
1993 ஆம் ஆண்டு முதன் முதலாக புதிய தென்றல் என்கிற திரைப்படத்தை தயாரித்தார். அதன் பிறகு கூலி, மாண்புமிகு மாணவன் போன்ற பல படங்களை தயாரித்தார். 2006 இல் கமல்ஹாசன் நடிப்பில் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை தயாரித்தார். அந்த படம் நல்ல வெற்றியை பெற்று தந்தது.
தயாரிப்பாளருக்கு தோல்வி கொடுத்த இயக்குனர்கள்:
அதனையடுத்து 2008 இல் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்கிற திரைப்படத்தை தயாரித்தார். அது பெரும் வெற்றி அடையவில்லை என்றாலும் போட்ட காசையாவது பெற்று தந்தது. அதற்கு பிறகுதான் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் மகிழ் திருமேனிக்கு இவர் வாய்ப்பளித்தார்.
மகிழ் திருமேணி முன் தினம் பார்த்தேனே என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் படு தோல்வி அடைந்தது. அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கி நடித்த வித்தகன் படத்தை தயாரித்தார் மாணிக்கம் நாராயணன். அதுவும் படுதோல்வி அடைய அதோடு சினிமாவை விட்டு கிளம்பினார் மாணிக்கம் நாராயணன்.
இதுக்குறித்து பேட்டி ஒன்றில் கூறும்போது கடைசியா படம் தயாரிச்ச அந்த ரெண்டு இயக்குனர்கள்தான் என் சோலிய முடிச்சி விட்டது என வெளிப்படையாகவே கூறியுள்ளார் மாணிக்கம் நாராயணன்.
இதையும் படிங்க: விமலை வில்லனாக வைத்து எழுதின கதை… ஆனா நடந்ததே வேற!.. எந்த படம் தெரியுமா?