Cinema News
கல்யாணம் பண்ணிக்கல ஆனா வயித்துல புள்ள…! யார் யாரு தெரியுமா?
தமிழ் கலாச்சாரத்தின் படி திருமணம் ஆகாத பெண்கள் பிள்ளை பெற்றுக்கொள்வது என்பது ஒரு மிகப்பெரிய கேவலமாக கருதப்பட்டு வருவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
மேலும் இதனை ஒரு தவறான செயலாக சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஒருமித்த கருத்தினை கொண்டிருப்பது நமது கலாச்சாரத்தை பாதுகாக்க உதவும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
எனினும் திரை உலகில் அன்று முதல் இன்று வரை சில நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் பிள்ளை பெற்று எடுத்திருக்கிறார்கள் அப்படிப்பட்ட நடிகைகள் யார் யார் என்பது பற்றி தான் தற்போது விரிவாக பார்க்கப் போகிறோம்.
அந்த வரிசையில் முதலில் நடிகை சரிகாவை பற்றி பார்க்கலாம் இவர் குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமானவர். இதன் பிறகு ஹீரோயினியாக அவதாரம் எடுத்த இவர் தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த கமலஹாசனோடு காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பமானார்.
இரண்டாவதாக பார்க்கக்கூடிய நடிகை ஸ்ரீதேவி இவர் தென்னிந்திய படங்களில் மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்து பிரபலமானவர். பல வெற்றி படங்களை கொடுத்த இந்த நடிகை போனி கபூரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட இரண்டு மாதங்களில் முதல் பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அதாவது திருமணம் ஆவதற்கு முன்பே இவர்கள் இருவரும் தொடர்பில் இருந்த காரணத்தால் கர்ப்பம் தரித்திருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்ற நடிகை சுஜா வருணி மிளகாய் குசேலன் போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார். மேலும் இவர் சிவாஜி பேரனை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட ஆறே மாதத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் இதிலிருந்து இவர்கள் திருமணத்திற்கு முன்பே உறவில் இருந்திருக்கிறார்கள் அதன் மூலம் கர்ப்பம் ஆகி இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
வாரணம் ஆயிரம் வேட்டை போன்ற படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய நடிகை சமீரா ரெட்டி தான் அடுத்த இடத்தில் இருக்கக்கூடிய நடிகை இவர் பெங்களூருவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவரும் திருமணமான ஏழாவது மாதத்திலேயே ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியிருக்கிறார் இதிலிருந்து இவர் திருமணத்திற்கும் முன்பே ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது.