Cinema History
நடிக்க சொன்னா ஓவர் ஆக்டிங் பண்றீங்க..! பத்திரிக்கையாளர் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த சிவாஜி..!
சினிமாவில் கொடுத்த வசனத்தை மட்டும் மனப்பாடம் செய்து பேசுவது நடிப்பல்ல. காட்சிக்கு ஏற்ப முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டு நேர்த்தியான குரல் வளத்தோடு உடல் மொழியின் மூலம் வசனத்தை தெளிவாக வெளிப்படுத்துவது சிறந்த நடிப்புக்கு அடையாளம். அப்படி நடிக்க கூடியவர்களில் முக்கியமான இடத்தை பிடிப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தால் நாடகங்களில் நடிக்க தொடங்கினார்.
அதன் பிறகு பல நாடக கம்பெனியில் சிறுசிறு இடங்களில் நடித்துக் கொண்டிரு இருந்தார். பின்னர் எம்.ஆர் ராதாவின் நாடக கம்பெனியில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. வாய்ப்பைக் கச்சிதமாக பயன்படுத்தி நடிப்பில் பட்டையை கிளப்பி உள்ளார் சிவாஜி கணேசன். பின்னர் எம்.ஆர்.ராதா சிவாஜியை சென்னைக்கு அழைத்து வருகிறார். பின்னர் அண்ணாவுடன் சேர்ந்து நாடகம் ஒன்றில் இணைந்து நடிக்கிறார். இந்த நாடகத்தை பார்க்க வந்த பெரியார் கணேசனின் நடிப்பை பாராட்டி அதில் நடித்த சிவாஜி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்ததால் அவருக்கு சிவாஜி என பெயரிட்டார் பெரியார்.
இப்படி பல நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கையில் பி.ஏ.பெருமாள் என்ற இயக்குனர் பராசக்தி எனும் நாடகத்தை திரைப்படமாக எடுக்க ஏ.வி.யம் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் சிவாஜி தான் பராசக்தி படத்தில் நடிக்க வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனத்திடம் பிடிவாதமாய் நின்றார் பி.ஏ.பெருமாள். கலைஞர் கருணாநிதியின் வசனத்தை தனக்கே உரித்தான பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி பெரும் பெயர் பெற்றார். படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்தார். வில்லன்,காமெடி,குணச்சித்திரம் புராண வேடம்,சரித்திர வேடம் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து நவரசத்தையும் வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார். இவருடைய சாதனைக்கு இந்திய நடிகர்களில் யாருமே நெருங்க முடியாது என்றே சொல்லலாம். எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் மனப்பாடம் செய்து தெளிவாக பேசக் கூடியவர். அதனால் தான் சினிமாவில் இவருக்கென்று தனியாக வசனங்கள் எழுதப்படுவதுண்டு. மனோகரா,வீரபாண்டிய கட்டபொம்மன்,ராஜா ராணி,அன்னை ஆலயம்,அன்பு,ரத்தத் திலகம்,கர்ணன் திருவிளையாடல் போன்ற படங்களில் சிறப்பான வசனங்களை நமக்கு கொடுத்திருப்பார்.
அப்படி நடிப்பிற்கே இலக்கணமாய் திகழ்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஒரு நாள் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றில் நிருபர் ஒருவர் ”நீங்கள் ஓவர் ஆக்டிங் செய்றீங்க”என்று கேட்டார். இதைக் கேட்ட சிவாஜி உடனடியாக அந்த நபரை ராஜா அண்ணாமலை என்ற இடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிவாஜி அந்த நாடக கலைஞரிடம் முன்கூட்டியே சென்று ”நீங்கள் மேடையில் சுத்தமாக பேசி நடிக்காமல் குறைவான சத்தத்தோடு பேசி நடிகர்கள். ஓவர் ஆக்டிங் எல்லாம் வேண்டாம் ”என்று சொல்லிவிட்டு வந்துள்ளார்.
அந்த அரங்கத்தில் மத்தியில் அந்த நிருபரும் சிவாஜி கணேசனும் அமர்ந்திருந்தனர். பின்னர் நாடகம் தொடங்கியது கலைஞர்கள் நடித்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அந்த பத்திரிகை நபருக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். என்று கேட்டார் அதற்கு சிவாஜி “இதுதான் பிரச்சனை. இப்போது புரிகிறதா..” மேடையில் நாம் வசனங்களை பேசி நடிக்கும் பொழுது பின்னால் இருப்பவர் வரைக்கும் கேட்க வேண்டும். அதற்குத்தான் அப்படி நாங்கள் நடிக்கிறோம் என்றார். இந்த வகை சினவுமாவிற்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் பத்திரிக்கையாளர் தான் கேட்ட கேள்வி மிகவும் தவறு என புரிந்து கொள்ளும் விதமாக ஒரு உதாரணத்தை காண்பித்துள்ளார் சிவாஜி கணேசன்.