Cinema History
“எம்ஜிஆர் படங்களில் நெஞ்சைத் தொடும் தத்துவ பாடல்கள்..!”- இந்த தலைமுறைக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும்..!
இன்றைய தமிழ் திரைப்படங்களில் வருகின்ற பாடல்களின் வரிகள் என்ன அவற்றுக்கான அர்த்தங்கள் என்ன என்று கண்டுபிடிக்க ஒரு அகராதியை உருவாக்க வேண்டும் என்று கூறலாம். அந்த அளவு பாடல் வரிகளில் தெளிவு இல்லாமலும் அது தமிழ் வார்த்தைகளால் என்று கேட்கத் தோன்றும் அளவு பாடல் உள்ளது.
ஆனால் எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் துறைக்கு வந்த திரைப்படப் பாடல்கள் அனைத்தும் அவர்களது ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு உத்வேகத்தையும், நம்பிக்கையும் ஏற்படுத்தக் கூடிய தத்துவப் பாடல்கள் பல வந்தது அந்தப் பாடல்கள் இயன்றிருக்கும் தலைமுறைக்கும் ஏற்றதாக இருக்கும்.
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா பாடல் வரிகள் இன்றும் தலைமுறைகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பது போல் உள்ளது. நேரம் வரும்போது சரியான வகையில் அதை பயன்படுத்த வேண்டும் என்ற வரிகள் அதில் வருவதால் எத்தலைமுறைக்கும் பொருந்தக்கூடிய வழியாக அது உள்ளது என்று கூறலாம்.
விவசாயம் இல்லையென்றால் அனைத்தும் அழிந்து விடும் என்ற உண்மையை உலகிற்கு எடுத்து உரைக்கும் வண்ணம் கடவுள் எனும் விவசாயி என்ற பாடல் வரிகள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் ஒவ்வொருவரது மனதில் நிலைத்து நிற்பதோடு அதனை பின்பற்றக் கூடிய வகையில் உள்ளது.
மனது தடுமாறி இருக்கும் மனிதர்கள் தங்கள் வாழ்வில் நிலையாக இருப்பதற்காக அவர் பாடிய பாடல் விழிக்கின்றாய் எதிரில் உள்ளது தெரிகின்றதா என்ற வரிகள் எவ்வளவு ஆழமானது நம்மை எப்படி சிந்திக்க வைக்கிறது. இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகிறதா என்று அந்த பாடல் வரிகள் கூறிய உண்மை எவ்வளவு உண்மையானது.
பெண்மையின் மென்மையை இலை மறைவு காய் மறைவாக உணர்த்தக்கூடிய பாடல் வரிகள் குறும்புக்கார வெள்ளாடு வேலியில் தாண்டி வராதோ போன்ற பாடல் இன்றைய இளைஞர்களுக்கு புத்தி புகட்டுவது போல உள்ளது.
உள்ளதைச் சொன்னால் பைத்தியம் என்று உலகம் சொல்லுது என்ற பாடல் வரிகள் நமது மனதில் பலவிதமான எண்ணங்களையும் உண்மை நிலையை உணர்ந்து கொள்ள வேண்டிய ஆழத்தையும் உணர்த்துகிறது.