Cinema History
அமலா பாலோடு முத்தக் காட்சியை 20 தடவை பண்ணுனேன்… ஓப்பனாக உடைத்த நடிகர்!..
சிந்து சமவெளி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன் பிறகு விகடகவி என்கிற திரைப்படத்தில் நடித்தார்.
ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே பெரிதாக வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து மூன்றாவதாக அவர் நடித்த மைனா திரைப்படமே மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது.
அதனை தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற துவங்கினார் அமலாபால். அதர்வாவுடன் சேர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், விஜய்யின் தலைவா, வேலையில்லா பட்டதாரி என பல படங்களில் நடித்தார். தலைவா படத்தின் போது அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல் விஜய்க்கும் இவருக்கும் காதலானது. பிறகு திருமணம் செய்துக்கொண்ட இவர்கள் சில காலங்களிலேயே பிரிந்தனர்.
அமலா பாலோடு எடுத்த காட்சி:
அமலா பால் நடித்த முதல் படமான மைனாதான் நடிகர் விதார்த்திற்கு முதல் படமாகும். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் விதார்த். ஒரு பேட்டியில் அவர் கூறும்போது மைனா படத்தில் ஒரு பாடலில் அமலா பாலின் முகத்திற்கு மிக நெருக்கமாக வந்து முத்தமிடாமல் விலகுவது போல ஒரு காட்சி இருந்தது.
அந்த காட்சியை விதார்த்தை வைத்து படமாக்கினார் பிரபு சாலமன். ஆனால் விதார்த்திற்கு கூச்சமாக இருந்ததால் அமலாபாலின் முகத்திற்கு நெருக்கமாக செல்லவே பயந்துள்ளார். இதனால் 20 முறை எடுத்தும் அந்த காட்சி சரியாக வரவில்லை. பிறகு கேமிராவை ஆஃப் செய்துவிட்டு இதற்காக விதார்த்திற்கு பயிற்சி கொடுத்து அந்த காட்சியை படமாக்கியுள்ளனர். இந்த நிகழ்வை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: லைட்டா பட்டி டிங்கரிங்!.. அந்த படத்தின் தழுவல்தான் தேவர் மகன்!.. அட ஆமால்ல!..