Connect with us
radha

latest news

இது ஹீரோயின் இல்ல காஞ்ச கருவாடு..! ராதாவை கலாய்த்த பிரபல நடிகர்..!

எண்பதுகளில் உச்சம் பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம்,ஹிந்தி போன்ற படங்களில் நடித்து இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். உயரமான உடல் அமைப்பு மற்றும் பார்ப்பதற்கு அழகான கவர்ச்சி முகம் கொண்டிருந்ததால் மற்ற ஹீரோயின் காட்டிலும் தனித்துவ அடையாளத்தை கொண்டிருந்தார். கிராமத்து கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பார். இதனால் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெங்கும் உள்ள மக்களின் கவனத்தை பெற்றார்.

radha 2

radha 2

எம்பதுகளின் முன்னணி நடிகராக விளங்கிய ரஜினி,கமல்,விஜயகாந்த்,கார்த்திக் போன்றவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் சகோதரியான அம்பிகாவும் திரைப்பட நடிகை ஆவார். இவரும் சமகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துள்ளார். இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். பின்னர் 1991 ஆம் ஆண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவருக்கும் ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

alaigal oivathillai

alaigal oivathillai

கார்த்திகா மற்றும் துளசி ஆகியோர் தமிழ் சினிமாவில் நல்ல ஓபனிங் கிடைத்தாலும் தற்பொழுது பட வாய்ப்புகள் இன்றி உள்ளனர். அதன் பிறகு ராதா பல தொலைக்காட்சி ரியாலிட்டி சோக்களில் பங்கேற்றார். இந்நிலையில் இன்று ராதா மக்களால் அறியப்படும் சினிமா நடிகையாக இருந்தாலும் இவர் அறிமுகமான முதல் படத்தில் நடிகர் ஒருவர் படுமோசமாக கிண்டல் அடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் அறிமுக நடிகர்களாக கார்த்திக் ராதா உடன் இணைந்து” அழகை ஓய்வதில்லை” எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினர்.

karthik

karthik

கார்த்திக் பழம்பெறும் நடிகரான முத்துராமனின் மகன் ஆவார். முதலில் அலைகள் ஓய்வதில்லை நடிக்க ஒப்புக்கொள்ள வில்லையாம். பாரதிராஜாவின் வற்புறுத்தலுக்காகவே இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். பின்னர் முதல் நாள் காட்சியின் போது இயக்குனர் பாரதிராஜா கார்த்திக்குக்கு ஹீரோயினை அறிமுகம் செய்திருக்கிறார். அப்பொழுது கிண்டலாக ”இது ஹீரோயின் இல்ல காஞ்ச கருவாடு” என நக்கல் அடித்து சிரித்துள்ளனர். இந்த தகவலை இதனை திரைப்பட‌ முன்னணி பத்திரிக்கையாளரான செய்யூர் பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Continue Reading

More in latest news

To Top