Connect with us
nalini

Cinema News

எங்க அம்மாவுக்கே தெரியாம நைசா எனக்கு கொடுப்பார்!.. விஜயகாந்த் பற்றி நளினி பகிர்ந்த சீக்ரெட்..

தமிழ் திரையுலகில் எந்த சினிமா பின்னணி இன்றி நுழைந்து ரஜினி, கமல் ஆகியோருக்கே டஃப் கொடுக்கும் ஹீரோவாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். துவக்கத்தில் வில்லனாக கூட சில படங்களில் நடித்துள்ளார். சட்டம் ஒரு இருட்டறை படம் இவரை ஹீரோவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வைத்தது. ஒருகாலத்தில் ரஜினி, கமலுக்கு படங்களுக்கு இணையாக இவரின் படம் வசூலை அள்ளியது. சில படங்கள் அவர்கள் இரண்டு பேரின் படங்களையும் விட அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

vijayakanth

விஜயகாந்த் பற்றி எல்லோரும் சொல்லும் ஒரே விஷயம். அவர் மிகவும் நல்லவர், இரக்க சுபாவம் உள்ளவர். எல்லோருக்கும் உதவும் இதயம் கொண்டவர். யாருக்கேனும் பிரச்சனை எனில் முதல் ஆளாக களத்தில் இறங்கும் நபர் இவர். எம்.ஜி.ஆருக்கு பின் படப்பிடிப்பில் அவர் என்ன சாப்பிடுகிறாரோ அது படப்பிடிப்பு குழுவினர் எல்லோருக்கும் கிடைக்கும் படி செய்தவர். விஜயகாந்தை போன்ற ஒரு மனிதரை பார்க்கவே முடியாது என்பதுதான்.

இதையும் படிங்க: படம் எடுக்குறேன்னு மும்பைல இருந்து பொண்ணுங்களை அழைச்சிட்டு வரான்!. அஜித் பட இயக்குனரை கிழித்த தயாரிப்பாளர்!..

nalaini_main_cine

nalini

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகை நளினி ‘விஜயகாந்த் எனக்கு அண்ணன் போன்றவர். அவருடன் சில படங்களில் நடித்துள்ளேன். மதிய உணவு இடைவேளையில் என் அம்மா கொண்டு வரும் சாப்பாடு எனக்கு பிடிக்கவே பிடிக்காது. எனவே, அவரிடம் சென்று அழுவது போல் நடிப்பேன். உடனே அவர் ‘ஒன்னும் ஃபீல் பண்ணாத.. என் வீட்டிலிருந்து சாப்பாடு வருது.. மேக்கப் ரூமுக்கு போ. வேகமாக சாப்பிட்டு வந்துடு’ என்பார். நாங்கள் இரண்டு பேசும் பேசுவதை பார்த்து என் அம்மா வந்து ‘என்னப்பா அவளுக்கு கொடுக்கிற?’ என கேட்பார். நான் எதும் கொடுக்கலம்மா என எதையாவது சொல்லி சமாளிப்பார். அந்த கேப்பில் நான் போய் வேகமாக சாப்பாட்டு வந்துவிடுவேன். அவர் போல ஒருவரை பார்க்க முடியாது’ என பேசியிருந்தார்.

இதையும் படிங்க: அமைச்சரா இருந்துக்கிட்டு இதுதான் உங்க வேலையா? எந்நேரமும் நடிகையுடன் உதயநிதி? கடுப்பான பிரபலம்

Continue Reading

More in Cinema News

To Top