Connect with us
revathy

Cinema History

நானும் மணிரத்தினமும் தெருதெருவா அலைஞ்சோம்!.. ஒன்னும் கிடைக்கல… ஃபீல் பண்ணி பேசிய ரேவதி…

தமிழ் சினிமாவில் ஃபிரெஸ்ஸாக, வேறு மாதிரி கதை சொல்லியாக வந்தவர் மணிரத்னம். முதலில் கன்னடத்தில் ‘பல்லவி அணு பல்லவி’ என்கிற படத்தை இயக்கினார். இவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் சுயமாக சினிமாவை கற்றுக்கொண்டவர். பக்கம் பக்கமாக வசனம் பேசிய சினிமாவில் வசனத்தை குறைத்து காட்சி வழி கதை சொன்னவர் இவர். அதனால்தான் இப்போதும் சினிமாவில் சாதிக்க துடிக்கும் பல இளைஞர்களுக்கும் இவர் முன்னோடியாக இருக்கிறார்.

இவரின் இயக்கத்தில் வெளிவந்த மௌனராகம், ரோஜா, பம்பாய், தளபதி, இருவர், அக்னி நட்சத்திரம், நாயகன், அஞ்சலி ஆகிய படங்களை பற்றி இப்போதும் பேசுகிறார்கள் எனில் அதற்கு ஒரே காரணம் மணிரத்னம் மட்டுமே. இப்போது கூட பொன்னியின் செல்வன் எடுத்து பெரிய ஹிட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தொட்டா வழுக்கிட்டு போகும் வெண்ணக்கட்டி உடம்பு!.. பல ஆங்கிளிலும் காட்டி சூடேத்தும் கீர்த்தி ஷெ

mounaragam Karthick, Revathi

மணிரத்னம் இயக்கத்தில் பகல் நிலவு, மௌன ராகம், அஞ்சலி ஆகிய மூன்று படங்களில் நடித்தவர் நடிகை ரேவதி. இவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘பகல் நிலவு படத்தின் போது மணிரத்தினத்தின் மேக்கிங் ஸ்டைல் எனக்கு பிடித்துப்போனது. அப்போதுதான் மௌனராகம் பட கதையை என்னிடம் சொன்னார். என்னிடம் ஆங்கிலத்தில் முழு கதையையையும் சொன்ன ஒரே இயக்குனர் மணிரத்னம் மட்டும்தான்.

Actress revathi

உடனே ‘இந்த கதையை நீங்கள் படமாக எடுத்தால் நான்தான் நடிப்பேன்’ என அவரிடம் சொன்னேன். அந்த படத்தை நாங்கள் துவங்கிய போது எந்த தயாரிப்பாளரும் அந்த படத்தை எடுக்க முன்வரவில்லை. நானே சில தயாரிப்பாளர்களிடம் நேரில் சென்று பேசினேன். ஆனால், யாருக்கும் அந்த கதையின் மீது நம்பிக்கை வரவில்லை. கடைசியில் மணிரத்தினத்தின் சகோதரர் ஜிவி அந்த படத்தை தயாரிக்க முன்வந்தார்’ என ரேவதி பேசியிருந்தார்.

இதையும் படிங்க: ஒரே ஒரு kiss தான்! எல்லாம் போச்சு.. அப்படி மட்டும் நடிச்சிருந்தா? புலம்பிய ரேவதி..

google news
Continue Reading

More in Cinema History

To Top