Connect with us
viji

Cinema News

கேப்டன்னா சும்மாவா? 275 நாள்களுக்கு மேல் ஓடி திரையரங்கையே அல்லு தெறிக்கவிட்ட விஜயகாந்தின் படங்கள்..

தமிழ் திரையுலகில் ஒரு ஒப்பற்ற நடிகராக இருந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக மக்கள் செல்வாக்கு அதிகம் கொண்ட நடிகராகவும் விஜயகாந்த் திகழ்ந்து வந்தார். ஒருவேளை அவர் அரசியல் பக்கம் சென்றிருக்காவிட்டால் இன்று இந்தியாவையே தன் வசம் வைத்திருக்கும் ரஜினியின் இடத்தை கூட பிடித்திருப்பார் விஜயகாந்த். அந்த அளவுக்கு மக்கள் பலம் அதிகம் கொண்ட நடிகராக இருந்தார்.

viji1

viji1

அதுமட்டுமில்லாமல் எம்ஜிஆர் எப்பொழுதுமே மக்கள் நலனில் அக்கறை கொண்டவராகவே இருந்தவர். அதே மாதிரியான எண்ணம் கொண்டவர் நம்ம விஜயகாந்த். உதவி என்று வந்தவர்களுக்கு எல்லாம் தன்னால் முடிந்த அளவு உதவிகளை செய்தவர். அவருடைய சினிமா வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு சில படங்கள் உண்டு. அந்த வகையில் 200 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய விஜயகாந்தின் திரைப்படங்களின் பட்டியலை தான் இதில் நாம் பார்க்க இருக்கிறோம்.

அம்மன் கோவில் கிழக்காலே : 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படம் ஒரு காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும் வணிக ரீதியாக அதிக வசூலை பெற்ற படங்களில் இந்தப் படம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இதே படத்தை தெலுங்கிலும் கன்னடத்திலும் ரீமேக் செய்து எடுத்தார்கள் இந்த படத்திற்காக விஜயகாந்த் இருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது. இந்த படத்தை இயக்கிய சுந்தர்ராஜன் முதலில் விஜயகாந்திற்கு பதிலாக ரஜினிகாந்தை வைத்து தான் எடுக்க முடிவு செய்தாராம். ஆனால் அது சரியாக அமையவில்லை ஆதலால் விஜயகாந்த் இந்த படத்திற்காக நடிக்க சம்மதித்திருக்கிறார்.

amman

amman

கேப்டன் பிரபாகரன் : 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படத்தை செல்வமணி இயக்கியிருந்தார். இது விஜயகாந்த் படமாக அமைந்தது. வேறு எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு பெருமையை விஜயகாந்த் இந்த படத்தின் மூலம் பெற்றார். அதாவது முன்னணி நடிகர்களாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி , ரஜினி, கமல் இவர்களுக்கு நூறாவது படம் அந்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. ஆனால் விஜயகாந்தின் நூறாவது படமான இந்த கேப்டன் பிரபாகரன் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

captain

captain

சின்ன கவுண்டர் : 1992 ஆம் ஆண்டு வெளிவந்த சின்ன கவுண்டர் திரைப்படத்தை ஆர் வி உதயகுமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக சுகன்யா நடித்திருந்தார். இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் கவுண்டமணி, மனோரமா, சுகன்யா இவர்கள் இணைந்து கலக்கிய அந்த நகைச்சுவை காட்சிகள். இந்தப் படமும் தெலுங்கிலும் கன்னடத்திலும் ரீமிக்ஸ் செய்து எடுத்தார்கள். இதுவும் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

chinna

chinna

வானத்தைப்போல : 2000 ஆண்டு வெளிவந்த இந்த வானத்தைப்போல திரைப்படத்தை விக்ரமன் எழுதி இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் . மேலும் மீனா, பிரபுதேவா, லிவிங்ஸ்டன், கௌசல்யா, அஞ்சு அரவிந்த் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. மேலும் 250 நாட்களுக்கு மேல் ஓடி வணிக ரீதியாக தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற படமாக மாறியது.

vana

vana

இதையும் படிங்க :ராதிகாவை பார்த்ததும் ஆசையாக ஓடி வந்த ரசிகை! சுயரூபத்தை காட்டிய அம்மணி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

google news
Continue Reading

More in Cinema News

To Top