Cinema History
சிவாஜியுடன் மீண்டும் இணைந்து நடிக்கலாமே? நிரூபர் கேட்ட கேள்விக்கு எம்ஜிஆர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
50 60களில் சினிமாவை தூக்கி நிறுத்திய பெருமைக்குரியவர்களில் மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் எம்ஜிஆர் சிவாஜியும். இருவருமே கிட்டத்தட்ட ஒன்று போல தான் சினிமாவிற்குள் நுழைந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இருவரும் நாடக மேடையில் இருந்து வெள்ளி திரைக்கு நுழைந்த நடிகர்கள் தான். இருவரும் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படமாக கூண்டுக்கிளி திரைப்படம் அமைந்தது.
அந்தத் திரைப்படத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து நடித்ததே இல்லை. அதன் பிறகு மக்கள் திலகமாக எம்.ஜி.ஆரும் நடிகர் திலகமாக சிவாஜி கணேசனும் தங்களுடைய பெருமைகளை நிலைநாட்ட தொடங்கினார்கள். நல்ல குரல் வளம் ,தெளிவான உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு ,சிறந்த நடிப்புத் திறன் ஆகியவற்றோடு சிவாஜி ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்து வந்தார்.
இதையும் படிங்க : இளையராஜா முன்பே சிகரெட்டை ஊதிய அரவிந்த்சாமி!.. பதிலுக்கு இசைஞானி செஞ்சதுதான் மாஸ்…
எம்ஜிஆரை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்த்த படமாக காவல்காரன் திரைப்படம் விளங்கியது. அதற்கு முன் எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும் அவர் நடித்த ரிக்ஷாக்காரன் திரைப்படம், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படம், நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்கள் அவரை பெருமையின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இந்தப் பக்கம் சிவாஜி கணேசன் மனோகரா, ராஜ ராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் ,கர்ணன் போன்ற சரித்திர படங்களில் நடித்து பெரும் புகழை அடைந்தார். இப்படி இருவரும் மாறி மாறி தங்களுடைய திறமைகளை நிரூபித்து சமமான ரசிகர் பட்டாளத்துடன் சினிமாவில் வலம் வந்தனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே மோதல்கள் இருப்பதாக அப்போதைய செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தன. ஒரு சமயம் எம்ஜிஆரை பார்க்க வந்த நிருபர் எம்ஜிஆரிடம் “உங்களுக்கும் சிவாஜிக்கும் மோதல் இல்லை என்பதை நிரூபிக்க இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கலாமே?” என்று கேட்டாராம்.
அதற்கு சிரித்தபடியே எம்ஜிஆர் “இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்து அந்த படம் ஒழுங்காக வெளியாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் கேமரா வைக்கும் பொழுது யாருக்கு முக்கியத்துவம் இருக்கும் என எனக்கும் நன்றாக தெரியும். சிவாஜிக்கும் நன்றாக தெரியும். அதனாலயே படப்பிடிப்புகளுக்கு இடையிலேயே பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.
இதையும் படிங்க : கேப்டன்னா சும்மாவா? 275 நாள்களுக்கு மேல் ஓடி திரையரங்கையே அல்லு தெறிக்கவிட்ட விஜயகாந்தின் படங்கள்..
இதையெல்லாம் தாண்டி படமும் நன்றாக வந்து தியேட்டரில் வெளியாகும் போது என்னை பார்க்கும் போது என்னுடைய ரசிகர்கள் கைதட்டுவார்கள். சிவாஜியை பார்க்கும் பொழுது சிவாஜியின் ரசிகர்கள் கைதட்டுவார்கள். இதனால் ஏற்படும் கலேபரம் என்ன ஆகும் என்பது அனைவருக்கும் தெரியும் . இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் நடிக்க வேண்டுமா?” என்று சிரித்தபடியே கேட்டாராம் எம்ஜிஆர்.