Cinema History
இளையராஜா முன்பே சிகரெட்டை ஊதிய அரவிந்த்சாமி!.. பதிலுக்கு இசைஞானி செஞ்சதுதான் மாஸ்…
எப்படி தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு கனவு கன்னியாக ஸ்ரீ தேவி இருந்தாரோ அதே போல பெண்கள் மத்தியில் கனவு கண்ணனாக இருந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தளபதி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமான உடனேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இயக்குனர் மணிரத்தினத்திடமும் இவர் நல்ல பேரை பெற்றார். இதனால் அடுத்ததாக இவரை கதாநாயகனாக வைத்து ரோஜா என்னும் திரைப்படத்தை இயக்கினார் மணிரத்தினம்.
ரோஜா எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. மேலும் இது ஏ.ஆர் ரகுமானுக்கு முதல் படமாக அமைந்தது. அப்போது இளையராஜாவும் நல்ல பிரபலமான இயக்குனராக இருந்தார். தளபதி படத்திற்கு அவர்தான் இசையமைத்தார்.
அசால்ட்டாக அமர்ந்திருந்த அரவிந்த்சாமி:
பொதுவாக படப்பிடிப்பு தளத்திற்கு இளையராஜா வந்தால் அங்கிருக்கும் ஊழியர்கள் அவர் முன்னால் எழுந்துதான் நிற்பார்கள். தமிழ் சினிமாவில் இளையராஜாவிற்கு அப்படி ஒரு மரியாதை இருந்தது. இப்படி ஒரு நாள் படப்பிடிப்பிற்கு வந்துள்ளார் இளையராஜா. அனைத்து ஊழியர்களும் அவருக்கு மரியாதை செய்தபடி நிற்க, அரவிந்த் சாமி மட்டும் அமர்ந்தப்படி சிகரெட் பிடித்துள்ளார்.
அதை பார்த்த பக்கத்திலிருந்த நபர் அரவிந்த்சாமியிடம் இளையராஜா வருகிறார். சிகரெட் பிடிக்காதீர்கள் என கூறியுள்ளார். அதற்கு அரவிந்த் சாமி இளையராஜாவிற்கு அவரது ஸ்டுடியோவில் என்ன மரியாதை தர வேண்டுமோ அதை கொடுப்பேன். ஆனால் இது படப்பிடிப்பு தளம் இங்கு என் இஷ்டத்துக்குதான் இருப்பேன் என கூறியுள்ளார்.
அதை கேட்ட இளையராஜா அரவிந்த்சாமி சொல்வது சரிதானே. அவரை அவர் இஷ்டத்துக்கு விடுங்கள் என பெரிய மனசோடு சொல்லிவிட்டு சென்றுள்ளார். பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: மழையால் இயக்குனரோடு கோவில் பக்கம் ஒதுங்கிய மீரா ஜாஸ்மின்… அங்கதான் சம்பவமே!..