எல்லாம் அவருக்காகவா? திருவண்ணாமலைக்கு திடீர் விசிட் அடித்த ரஜினி

Published on: July 1, 2023
rajini
---Advertisement---

இன்று யாரும் எதிர்பாராத விதமாக ரஜினியின் திருவண்ணாமலை விசிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ரஜினியை அழைத்துக்கொண்டு இளையராஜா ஒரு சமயம் திருவண்ணாமலைக்கு சென்றாராம். அந்த நேரம் ரஜினி மிகவும் உச்சத்தில் இருந்திருக்கிறார். இதனால் ரஜினி வருவதை அறிந்து கொண்ட அங்குள்ள மக்கள் மடமடவென கூட்டமாக திரண்டு விட்டார்களாம்.

இதைப் பார்த்ததும் இளையராஜாவுக்கு பெரும் அதிர்ச்சியாகி விட்டதாம். உடனே ரஜினியை நீ இங்கிருந்து கிளம்பு போ போ என்று சொன்னாராம் இளையராஜா. இளையராஜாவை ரஜினி எப்பொழுதும் சாமி என்றே தான் அழைப்பார். அதனால் சாமியே சொல்லிவிட்டார் என ரஜினியும் திருவண்ணாமலை சாமியை பார்க்காமல் கிளம்பி வந்து விட்டாராம்.

rajini1
rajini1

இது அன்று நடந்த விஷயம் என்றாலும் இன்று ரஜினி திடீரென திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி லால் சலாம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு செஞ்சி அருகில் நடந்து கொண்டிருக்கின்றதாம்.

அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் அங்கு நடைபெற ரஜினி அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். அதனால் பக்கத்தில் இருக்கும் திருவண்ணாமலைக்கு சென்று வரலாம் என இன்று சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு வந்தாராம் ரஜினி.

rajini2
rajini2

இது ஒரு பக்கம் இருக்க இந்த சம்பவத்தால் ரசிகர்கள் பலர் மயில்சாமி கூறியதை நினைவு கூர்ந்தனர். அதாவது திருவண்ணாமலையில் இருக்கும் சிவனுக்கு ரஜினி கையால் பால் அபிஷேகம் செய்ய வைக்க வேண்டும் என விரும்பி இருந்தார். அதுவும் மயில்சாமி இறப்பதற்கு முந்தின நாள் தான் இந்த ஆசையை சொல்லி இருந்தார்.

இதையும் படிங்க :உண்மையிலேயே இதுதான் பிரச்சினை! ஜெண்டில்மேன் படத்தில் சரத்குமார் நடிக்காததன் காரணம்

அதனால் இன்று ரஜினி திருவண்ணாமலை போனதன் காரணம் ஒருவேளை மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இருக்கலாமோ என ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். ஆனாலும் படப்பிடிப்பு சமயத்தில் சும்மா அப்படியே சாமி கும்பிட்டு வரலாம் என்றுதான் சென்றிருப்பார் என்றும் மயில்சாமியின் ஆசையை தக்க நேரம் பார்த்து ரஜினி கண்டிப்பாக செய்வார் என்றும் கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.