Connect with us

Cinema News

இப்பயும் அந்த ஊர்ல படம் பாக்குறது இல்ல!.. சினிமாவிற்கே தடை போட்ட கிராமம்! நம்பவே முடியலையே…

தமிழ் சினிமாவில் எவ்வளவோ வித்தியாசமான கதைகளை கொண்ட திரைப்படங்களை பார்த்திருப்போம். ஆனால் அப்படியான கதைகள் சில நேரங்களில் நிஜ வாழ்க்கையிலும் நடப்பதுண்டு.

உதாரணமாக முண்டாசுப்பட்டி என்கிற திரைப்படத்தில் கிராமத்தில் இருக்கும் ஒரு அறியாமையை பற்றி கூறியிருப்பார்கள். அந்த கிராமத்தில் உயிரோடு இருக்கும் காலத்தில் யாருமே போட்டோ எடுக்க மாட்டார்கள் என்பது போல நிஜ வாழ்க்கையிலும் விசித்திரமான பழக்கங்களைக் கொண்ட சில கிராமங்கள் உள்ளன.

தூத்துக்குடிக்கு அருகிலுள்ள காயல்பட்டினம் என்கிற கிராமத்தில் இப்படியான ஒரு பழக்கம் உள்ளது. வரலாறு படியே அந்த ஊர் இஸ்லாம் தொடர்பான வரலாற்றை கொண்டுள்ளது.

கிபி 642-ல் இஸ்லாத்தை பரப்ப கடல் வழியாக வந்த ஒரு குழு வந்து சேர்ந்த பகுதி தான் காயல்பட்டினம் என கூறப்படுகிறது. இந்த பகுதியில் அதிகமாக இஸ்லாமியர்கள்தான் வாழ்கின்றனர். இஸ்லாத்தை பொருத்தவரை திரைப்படங்கள் பார்ப்பது இசை கேட்பது போன்றவை மதத்திற்கு எதிரான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

எனவே இந்த ஊரில் திரையரங்குகளே கிடையாதாம். அந்த ஊரில் உள்ள சட்டப்படி இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்தில் ஒரு திரையரங்கு கூட கிடையாது.

இப்போது வரை அந்த சட்டம் அங்கு அமலாக்கத்தில் உள்ளது காயல்பட்டினத்தை சேர்ந்த கிராமவாசிகள் திரைப்படம் பார்க்க ஆசைப்பட்டால் அவர்கள் உறவினர்கள் இருக்கும் வேறு ஊர்களுக்கு சென்று அங்கு உள்ள திரையரங்கில்தான் திரைப்படத்தை பார்க்கிறார்களாம். இந்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: உண்மையிலேயே இதுதான் பிரச்சினை! ஜெண்டில்மேன் படத்தில் சரத்குமார் நடிக்காததன் காரணம்

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top