Cinema History
எம்.ஜி.ஆரை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல நடிகர்..! அங்கதான் விஷயமே இருக்கு..!
தமிழ் சினிமாவின் முழுமையான ஆளுமைக்கு சொந்தக்கார் எம்.ஜி.ஆர். நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் ஆரம்ப காலத்தில் நாடகத்தின் மூலம் நடிப்பை கற்றுக்கொண்டு திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அரசியலில் இவருக்கு ஆர்வம் அதிகரித்தது. அரசியலிலும் இணைந்து பின்னாடி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக ஜொலித்தார்.
தமிழ் சினிமாவின் தமிழகத்தையும் ஆண்ட பெருமை கூறியவர். சிறுவயதில் ஒரு வேலை சாப்பாட்டிற்க்கு கூட வழியில்லாமல் வறுமையில் பிடியில் தவித்து பின்னர் படிப்படியாக உயர்ந்ததன் காரணமாக வறுமை எவ்வளவு கொடியது என்று நன்கு அறிந்திருந்தார். அதனால் தான் உதவி என்று கேட்டால் தேடி போயும் உதவுவார் தேடி வந்தவருக்கும் உதவுவார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இருந்தாலும் வேற்றுமை பாராமல் எல்லோரிடமும் நன்றாக பழகும் குணம் கொண்டவர். அதனால் தான் இன்றளவும் தமிழ்நாட்டில் கடை கோடியில் உள்ள மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார். இயக்குனர் பாக்யராஜ் எம்.ஜி.ஆர் உடன் நட்பு ரீதியான தொடர்பில் இருந்தவர். இவரின் உதவி இயக்குனர்களின் ஒருவர் தான் பாண்டிய ராஜன். இவரிடம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மன்னிப்பு கேட்டது கேட்டதாக வெளிவந்த தகவல் பரப்பரப்பை ஏற்படுத்தி வந்தது.
1985 ஆம் ஆண்டு பிரபு மற்றும் ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் கன்னி ராசி. இதில் தான் பாண்டியராஜன் முதல் முதலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருப்பார். அதே ஆண்டு ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்பொழுது இயக்குனர் பாக்யராஜுக்கும் பாண்டியராஜனுக்கும் இடைப்பட்ட நட்பின் காரணமாக பாண்டியராஜன் ஆண்பாவம் திரைப்படத்தை எம்.ஜி.ஆர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அதன்படியே எம்.ஜி.ஆரும் அரை மனதோடு விருப்பம் இல்லாமல் படத்தை காண வந்திருந்தார். ஆரம்பத்தில் படத்தில் நாட்டம் இல்லாத எம்.ஜி.ஆர் போகப் போக தன் இருக்கையில் நுனியில் அமர்ந்து படத்தை பார்க்க ஆரம்பித்தார். பின் படத்தைப் பார்த்துவிட்டு பாண்டியராஜனை அழைத்து ”உன் படம் அருமையாக இருந்தது நடிப்பும் நகைச்சுவையும் நன்றாக இருந்தது. நீ சிறந்த நடிகனாக மேலும் வளர வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் ஆரம்பத்தில் உன்னை பார்த்து தவறாக எடை போட்டு விட்டேன் என்னை மன்னித்துவிடு” என்றும் கேட்டுள்ளார். இதைக் கேட்ட பாண்டியராஜன் உடனே எம்ஜிஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதத்தை பெற்றுள்ளார். திறமை எங்கிருந்தாலும் தட்டிக் கொடுக்கத் தயங்காத மனம் கொண்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்