ஒரு ஹீரோ செய்யுற காரியமா இது!.. நண்பன் காதலை உள்ளே புகுந்து கெடுத்த அசோக் செல்வன்…

Published on: July 3, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் அனைத்து படங்களிலும் நடிக்காமல் தொடர்ந்து திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவராக நடிகர் அசோக் செல்வன் இருக்கிறார். தமிழில் முதன் முதலாக சூது கவ்வும் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானார் அசோக் செல்வன்.

அதற்கு பிறகு பீட்சா படத்தின் இரண்டாம் பாகமான வில்லா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் அசோக் செல்வன். அதனை தொடர்ந்து அவர் நடித்த தெகிடி திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. துப்பறியும் கதை களத்தைக் கொண்ட அந்த திரைப்படம் இதுவரை தமிழ் சினிமாவுக்கு வந்த திரைப்படங்களில் இருந்து புது ரகமாக இருந்தது.

அதனை தொடர்ந்து அதிக வாய்ப்புகளை பெற்றார் அசோக் செல்வன். தொடர்ந்து அவர் நடிக்கும் திரைப்படங்களில் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு முக்கியத்துவம் இருந்து வருகிறது.

அசோக் செல்வன் செய்த வேலை:

தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசும் பொழுது தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அவரது நண்பர் ஒருவர் வெகு நாட்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் ஆனால் அதனால் நிறைய கஷ்டங்களை அவர் அனுபவித்ததால் அசோக் செல்வனே அந்த பெண்ணிற்கு அவரது நண்பர் போல மெசேஜ் அனுப்பி அவர்களது காதலை பிரித்துள்ளார்.

ashok selvan
ashok selvan

இந்த விஷயத்தை அவரே அந்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார். இவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்து கொண்டு இப்படி எல்லாம் செய்யலாமா என்று நெட்டிசன்கள் அவரிடம் கமெண்டில் இதுக்குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.