Connect with us

Cinema News

5 முதலமைச்சர்களோட நடிச்ச ஒரே நடிகை அவங்க மட்டும்தான்!.. யாரு தெரியுமா?

சினிமாவில் தொழில்நுட்பம் வளர துவங்கியபோது சினிமா பெரும் வளர்ச்சியை காண துவங்கியது. அதனையடுத்து நாடகங்களை பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு ஒரு மாற்று பொழுது போக்காக சினிமா அமைந்தது.

அதையும் தாண்டி சினிமா மக்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சமானது. இதனால் சினிமா கலைஞர்கள் பலரும் அரசியலுக்கு வந்து சாதிக்க துவங்கினர். அமெரிக்காவில் துவங்கி தமிழ்நாடு வரை சினிமா மூலமாக மக்களுக்கு அறிமுகமான நட்சத்திரங்கள் பிறகு அரசியலில் ஆள துவங்கினர்.

அப்படி தமிழ் திரையுலகில் அரசியலுக்கு சென்ற நடிகர்கள் பலர். அப்படியான முக்கிய பிரபலங்களுடன் சேர்ந்து பணிப்புரிந்தவர்தான் நடிகை மனோரமா. சாதரண கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பலரில் மனோரமாவும் ஒருவர்.

மனோரமாவின் நகைச்சுவைக்கு அப்போது அதிக வரவேற்பு இருந்து வந்தது. அதனால் சினிமாவில் அறிமுகமான சில காலங்களிலேயே பல படங்களில் நடிக்க துவங்கினார் மனோரமா. அப்படி நடிக்கும்போது வருங்காலத்தில் பெரும் முதலமைச்சர்களாக ஆக போகிறவர்கள் என தெரியாமலேயே முக்கியமான 5 புள்ளிகளோடு மனோரமா பணிப்புரிந்துள்ளார்.

அதில் முதலாவது அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணா திரைப்படங்களுக்கு கதை வசனங்கள் எழுதி வந்தபோது அவருடன் சேர்ந்து பணிப்புரியும் வாய்ப்பை பெற்றார் மனோரமா. அதே போல என்.டி ராமாராவ், கலைஞர் மு கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் சேர்ந்து நடித்துள்ளார் மனோரமா.

அதன் பிறகு அவர்கள் ஐவருமே முதலமைச்சர்களாயினர். எனவே சினிமாவில் ஐந்து முதலமைச்சர்களுடன் சேர்ந்து நடித்த பெருமையை பெற்றுள்ளார் மனோரமா.

இதையும் படிங்க: சினிமாவில் சாதிக்க அழகு வேண்டாம்!.. நடிப்பில் ஸ்கோர் செய்த நடிகைகளின் பட்டியல்…

Continue Reading

More in Cinema News

To Top